பிக் பாஸ் போய்ட்டு பெயரை கெடுத்த 9 பிரபலங்கள்.. அன்பு ஜெயிக்கும் நம்புறீங்களா? – Cinemapettai

Tamil Cinema News

விஜய் டிவி பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவில், சீசன் 1 முதல் 8 வரை பல பிரபல, வலுவான, இறுக்கமான குணங்களோடு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். “நல்லா இருந்த பேரை வீட்டுக்குள் சென்று கெடுத்துக் கொண்டவர்கள்” என்று ரசிகர்கள், சமூக ஊடகங்களில் பெரு பகுப்பாய்வுகளும் சர்ச்சைகளும் எழும்பின. இங்கே அந்த அணியில் அடிக்கடி பேசப்பட்ட, விமர்சிக்கப்பட்ட சில பிரபலங்களை பற்றி ஒரு பார்வை இடலாம்.

VJ அர்ச்சனா சந்தோக்

அர்ச்சனா என்பது தமிழ் தொலைக்காட்சி உலகில் நீண்ட கால அனுபவம் கொண்ட ஓர் VJ / TV ஹோஸ்டர்.
காமெடி டைம், இளமை புதுமை, நம்ம வீட்டு கல்யாணம், அதிஷ்ட லட்சுமி, சரி கம பா போன்ற பல நிகழ்ச்சிகளை ஹோஸ்ட் செய்துள்ளார். மேலும் திரைப்படங்களில் சிறியப் பாத்திரங்களை செய்தாலும், பெரும்பாலும் அவரை “TV பிரபலமான VJ / ஹோஸ்டர்” என்பவராகவே மக்கள் அறிந்துள்ளனர்.

வரவேற்பு மற்றும் முதல் தாக்கம்

அர்ச்சனாவின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவு பரோமோவில் “Thani Oruvan” திரைப்படத்தின் Theemai Than Vellum பாடல் பின்னணியில் காணப்பட்டு, அந்த நுழைவு மிகவும் “பிரமாதமானதாக” இருக்கிறதென்று கூறப்பட்டது. “Housemates”‑ஐ “titles” கொடுத்தது. அர்ச்சனா, வீட்டுக்குள்ள போட்டியாளர்களை (housemates) பார்வையாளர்களின் பார்வை, அவர்களின் நடை, சொற்பொழிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சில டைட்டில்கள் வழங்கினார். உதாரணமாக, Samyuktha Karthik‑ஐ “Showcase Bommai” என்ற டைட்டிலை கொடுத்தார்.

விமர்சனங்கள்

Wild Card போட்டியாளராக வந்தபோது, “பிக் பாஸ் விளையாட்டில் போராட்டம் சரியாய் நடக்கிறதா?” என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். எல்லாத்துக்கும் பதில் அளிக்கும் விதமாக அன்பு ஜெயிக்கும் நம்புறீங்களா என்று ஒரு கூட்டணி ஆரம்பித்து அர்ச்சனா அவருடைய விளையாட்டை ஆரம்பித்தார். ஆனால் உள்ளே போனதிலிருந்து மற்ற போட்டிகளை அதிகாரம் செய்து வருகிறார் என்று மக்கள் எதிர்மறை என விமர்சனங்களை குத்தி வெளியே அனுப்பி வைத்து விட்டார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் நல்ல பெரும் புகழும் சம்பாதித்த அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் போயிட்டு வந்த பிறகு மன ரீதியாக உடல் ரீதியாகவும் அவஸ்தை பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார்.

அறந்தாங்கி நிஷா

கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் பங்கிட்டு அதன் மூலம் பல மேடைகளில் காமெடி செய்யப்பட்டு கலகலப்பு 2, இரும்பு திரை மாறிடு கோலமாவு கோகிலா ஆண் தேவதை போன்ற படங்களில் காமெடி ஆக்டராக நடித்தார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கே போன பிறகு இவருடைய காமெடி திறமையை காட்டி மக்கள் மனதை வென்று பிரபலமாகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விமர்சனங்கள்

ஆனால் அதற்கு எதிர்மறையாக அன்பு கூட்டம் என்று ஆரம்பிக்கப்பட்டு எங்களுடைய அன்பை ஜெயிக்கும் நம்புகிறீர்களா என்று ஒரு தாரக மந்திரத்தின் மூலம் அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்கும் அளவிற்கு அரந்தாங்கி நிஷா பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதிலேயே வெளியேற்றப்பட்டார்.

வத்திக்குச்சி வனிதா

வெள்ளி திரையில் நடித்து பரிச்சயமான வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் போன பிறகுதான் பிரபலமானார். ஆனால் இவருடைய பிரபலம் எதிர்மறையான பெயரை வாங்கிக் கொடுத்து அதன் மூலம் வத்திக்குச்சி வருதா என்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

விமர்சனங்கள்

வனிதா பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கு பெற்றார் அதன் பிறகு ஆரம்பித்த சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார் பிறகு ரசிகர்களின் கோரிக்கைக்காகவும் டிஆர்பி ரேட்டிங் கம்மியான பிறகு வேறு வழி இல்லாமல் மறுபடியும் பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா சென்று அனைவரிடமும் பற்றவைத்து விறுவிறுப்பான போட்டியை தொடங்கி வைத்தார்.

புள்ளி கேங்கு மாயா மற்றும் பூர்ணிமா

மாயாவும் பூர்ணிமாவும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இல் போட்டியாளர்களாக இருந்தனர், அங்கு அவர்கள் வலுவான பிணைப்பையும் நட்பையும் வளர்த்துக் கொண்டனர்.இருப்பினும், வீட்டிற்குள் சில குறிப்பிடத்தக்க வாக்குவாதங்களும் இருந்தன. பூர்ணிமா இறுதியில் 16 லட்சம் ரொக்கப் பரிசோடு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார், பின்னர் மாயாவின் ஆதரவு மற்றும் நட்புக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோவை வெளியிட்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர்கள் தொடர்ந்து நிகழ்வுகளில் ஒன்றாகத் தோன்றினர், அவர்களின் தொடர்ச்சியான நட்பைக் காட்டினர்.

விமர்சனங்கள்

ஆனால் இவர்களுடைய நட்பு மற்றவர்களுக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருந்த நிலையில் ஒவ்வொருவரையும் காலி பண்ணும் விதமாக இவர்கள் இருவரும் சேர்ந்து மற்றவர்கள் விளையாட்டை கெடுக்கும் அளவிற்கு இருந்ததால் மக்களிடம் புள்ளி கேங்ஸ லேடி என்ற பெயர் எடுத்து வெளியேறினார்கள்.

bigg boss
bigg boss photo

சரவணன்

வெள்ளி திரையில் ஹீரோவாக நடித்து வந்த சரவணன் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருடைய பேச்சும் செல்களும் வேடிக்கையாக இருந்தாலும் மக்களை விறுவிறுப்பாக கொண்டு போனது. அத்துடன் கவின் சாண்டி இவரை சித்தப்பு என்று கூப்பிட்டு ஒரு கலகலப்பான போட்டியை கொடுத்து வந்தார்கள்.

விமர்சனங்கள்

ஆனால் இதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் வாயை கொடுத்து மாட்டிக் கொள்ளும் அளவிற்கு சரவணன் சின்ன வயதில் செய்த சில்மிஷத்தை கமலிடம் சொல்லும் விதமாக பஸ்ஸில் போகும்போது பெண்களை இடித்ததை சொல்லியதால் இதை கண்டிக்கும் விதமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணனை பாதியிலேயே வெளியே அனுப்பி விட்டார்கள்.

வீர தமிழச்சி ஜூலி

ஜூலி என்ற நபர் யார் என்பது மக்களுக்கு தெரியாமல் இருந்த பட்சத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனையில் மெரினா பீச்சில் செய்த போராட்டத்தின் மூலம் ஜூலி தமிழச்சி என்ற பெயருடன் அனைவருக்கும் பரிச்சயமான. இதை வைத்து பிக்பாஸ் வீட்டிற்குள் ஜெயித்து விடலாம் என்று சீசன் முதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அதற்கு எதிர் மாறாக தான் நடந்தது.

விமர்சனங்கள்

மாத்தி மாத்தி பேசி இங்கு இருப்பது அங்கே போட்டுக் கொடுப்பது அங்கு இருப்பவர்களை பற்றி தவறாக சொல்வது என்று சகுனி வேலையை பார்த்து தான் ஜூலி பெரும் மொத்தமாக டேமேஜ் ஆகி மக்கள் இவரை எலிமினேட் செய்து வெளியே அனுப்பி விட்டார்கள்.

காயத்ரி மற்றும் சக்தி

வெள்ளித்திரையின் மூலம் பிரபலமான சக்தி மற்றும் காயத்ரி குடும்பத்தின் பெயரை நிலைநாட்டும் விதமாக பிக் பாஸ் முதல் சீசனில் நுழைந்தார்கள். ஆனால் மொத்தமும் தலைகீழாகிவிட்டது என்பதற்கு ஏற்ப இவர்களின் நிலைமை மோசமாகிவிட்டது.

விமர்சனங்கள்

காயத்ரி மக்களிடம் பெற்ற எதிர்மறையான விமர்சனங்களும் நெகட்டிவ் கருத்துக்களுக்கும் ஆளானார். அத்துடன் சக்தியும் சேர்ந்து கொண்டு ட்ரிக்கர் என்ற வார்த்தையை யூஸ் பண்ணி மற்றவர்களை டேமேஜ் பண்ணியதால் கடைசியில் சக்தி பெயர் டேமேஜ் ஆகி வெளியே சென்று விட்டார். இவர்கள் இரண்டு பேருமே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் நல்ல பேரை வைத்திருந்தாலும் போன பிறகு மொத்த பேரையும் காலி பண்ணும் விதமாக எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுக் கொண்டார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.