Raju jayamohan : ராஜு ஜெயமோகன் அவர்கள் ஒரு திரைப்பட நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரும் கூட. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்” என்னும் தொடரில் நடித்து பெரும்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
அது மட்டுமல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர். இவர் தற்போது நடித்து முடித்த பன் பட்டர் ஜாம் என்ற படம் ஜூலை 18, 2025 அன்று வெளிவர இருக்கிறது.
இந்த படத்திற்கான நிகழ்ச்சி தற்போது நடைபெற்ற முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் நிறைய பிரபலங்கள் “பன் பட்டர் ஜாம்” படத்தின் சிறப்பம்சங்களை பேசினார்கள். நடிகர் ராஜு அவர்களும் இந்த படத்தில் உள்ள சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அது மட்டுமல்லாமல் தான் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்துக் கொண்டார். இந்த பட நிகழ்ச்சியில் பேசிய இமான் அண்ணாச்சி அவர்கள் பிக் பாஸ் ராஜூ அவர்களை புகழ்ந்து பேசி உள்ளார்.
பிக் பாஸ் ராஜுவின் சம்பளம் 600 கோடி உயரும்..
அதாவது “பன் பட்டர் ஜாம்” படம் வெளியானதுக்கு பிறகு பிக் பாஸ் ராஜா அவர்களின் சம்பளம் 600 கோடிக்கு உயரும் எனவும், இதற்காக அட்வான்ஸ் கொடுப்பதற்காக தயாரிப்பாளர்கள் அனைவரும் வரிசையில் நிற்பார்கள் எனவும் கூறியுள்ளார் இமான் அண்ணாச்சி.
இவர் கூறியிருப்பது பிக் பாஸ் ராஜூ அவர்களின் நடிப்பு திறமையை பாராட்டி என்று எடுத்துக் கொண்டாலும் கூட, 600 கோடி சம்பளம் என்பது சினிமா துறையில் சற்று அதிகமாக உள்ளது என எண்ணினாலும், நடிப்பு திறமையை பொறுத்து சம்பளம் அமையும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று.
பிக் பாஸ் ராஜூ அவர்கள் இமான் அண்ணாச்சி கூறியவாறு “பன் பட்டர் ஜாம்” படத்தில் சிறப்பாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக் பாஸ் ராஜூ அவர்கள் 600 கோடி சம்பளம் பெரும் உச்சத்தை அடைந்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.