பிச்சைக்காரராக ஸ்கோர் செய்தாரா தனுஷ்.? குபேரா முழு விமர்சனம் – Cinemapettai

Tamil Cinema News

Kuberaa Movie Review: தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் குபேரா படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று உள்ளனர்.

ட்ரைலரிலேயே இப்படம் அதிக கவனம் பெற்றது. அதை அடுத்து ப்ரமோஷன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ என அனைத்துமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இப்படி ரசிகர்களை ஆர்வத்தோடு காக்க வைத்து வெளியாகி இருக்கும் படம் எப்படி இருக்கு என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

குபேரா முழு விமர்சனம்

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற சட்டவிரோத வேலைகளை செய்யும் பணக்காரர் அதற்கு நாகர்ஜுனா உதவியை நாடுகிறார். அதற்காக தனுஷ் உட்பட நான்கு பிச்சைக்காரர்களை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த சதி வலையில் பிச்சைக்காரர்கள் ஒவ்வொருவராக இறந்து போகின்றனர். அதில் தனுஷ் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடுகிறார். அதற்கிடையில் ராஷ்மிகாவை அவர் சந்திக்க நேரிடுகிறது.

ராஷ்மிகாவுக்கு என்ன பிரச்சனை.? தனுஷ் நாகார்ஜுனாவிடமிருந்து தப்பித்தாரா.? இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

பிச்சைக்காரராக நடித்திருக்கும் தனுஷ் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். எந்த ஹீரோவுக்கும் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கும் துணிச்சல் வருமா என்பது கேள்விக்குறிதான்.

ஆனால் இமேஜ் என்ற வட்டத்திற்குள் வராமல் தனுஷ் இப்படி ஒரு கதாபாத்திரத்தை கையில் எடுத்தது பாராட்டுதலுக்குரியது. அதேபோல் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறது அவருடைய பர்பாமென்ஸ்.

அவருக்கு அடுத்து நாகார்ஜுனா சைலன்ட் ஆக ஸ்கோர் செய்கிறார். அதே போல் ராஷ்மிகாவுக்கும் அழுத்தமான கதாபாத்திரம். அவரும் புதுமையான நடிப்பை கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை பிளஸ் ஆக இருக்கிறது. அதிலும் போய் வா பாடல் தியேட்டரை அதிர வைத்துள்ளது. படத்தின் நீளம் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கிறது.

இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதை மூலம் இயக்குனர் ஆடியன்ஸை அமர வைத்துள்ளார். இரண்டாம் பாதியில் இருக்கும் எமோஷன் அதை தொடர்ந்து வரும் கிளைமாக்ஸ் காட்சி அனைத்துமே வேற ரகம்.

ஆக மொத்தம் நிச்சயம் படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்கலாம். அதே போல் தனுசுக்கும் இதன் மூலம் ஒரு தரமான ஹிட் கிடைத்துள்ளது.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.5/5

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.