Dhanush: கூலி படத்தில் பூஜா ஹெக்டே ஆட்டம் போட்ட மோனிகா பாடல் தான் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதையடுத்து விஜய்யுடன் நடிக்கும் ஜனநாயகன் படமும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.
அதேபோல் தமிழில் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் தனுஷ், விக்னேஷ் ராஜா இணையும் படத்தின் வாய்ப்பும் முதலில் அவரை தேடி தான் வந்திருக்கிறது.
ஐசரி கணேஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று படப்பிடிப்பும் ஆரம்பித்து விட்டது. இப்படத்தில் நடிப்பதற்காக அவரை அணுகிய போது பூஜை போடுவதற்கு ஒரு வாரம் முன்பு வரை இதோ அதோ என இழுத்தடித்து வந்துள்ளார்.
பிடி கொடுக்காமல் நழுவிய பூஜா ஹெக்டே
கடைசியில் இது சரிப்பட்டு வராது என மமிதா பைஜூவை கமிட் செய்துள்ளனர். இப்படி ஒரு வாய்ப்பை ஏன் பூஜா நழுவ விட வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது.
உண்மையில் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக தான் அவர் தனுஷ் படத்துக்கு நோ சொல்லி இருக்கிறார். தெலுங்கில் அவருக்கு மார்க்கெட் கொஞ்சம் ஸ்டெடியாக இருக்கிறது.
கொஞ்சம் கவனம் சிதறினாலும் மற்ற நடிகைகள் இடத்தை பிடித்துக் கொள்ளக்கூடும். அதனால் தான் தமிழை வெயிட்டிங் லிஸ்டில் வைத்துவிட்டு தெலுங்குக்கு ஓகே சொல்லி இருக்கிறார் பூஜா.