Vijay TV: விஜய் டிவி பிரபலம் ஒருவர் தன்னுடைய காதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்திருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பிக் பாஸ், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்தான் மணிகண்டா. இவர் தன்னை நடன துறையில் பிரபலப்படுத்திக் கொள்ள அதிகம் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
விவாகரத்து செய்த விஜய் டிவி பிரபலம்
மேலும் ஒரு சில படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் எல்லாம் வந்து கொண்டு இருக்கிறது. மணிகண்டா, அட்டகத்தி படத்தில் திவ்யா, நதியா கேரக்டர்களில் நடித்த இரட்டை சகோதரிகளில் ஒருவரான சோபியா என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
இவர்களுக்கு ஆரியன் என்ற ஒரு மகனும் இருக்கிறார். சோபியா திருமணத்திற்கு முன்பே விஜய் டிவியின் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாகவே இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

இருந்தாலும் இரு தரப்பில் இருந்தும் இதற்கு எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இன்னொரு பெண்ணுடன் மணிகண்டா ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு தனக்கு மகள் பிறந்திருப்பதாக நேற்று புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதன் மூலம் சோபியாவை விவாகரத்து செய்ததையும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார். மணிகண்டா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் பிறந்த அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் தான் அதில் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக நடித்த சோபியாவை சந்தித்து மணிகண்டா காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.