Priyanka and Manimehalai: திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்ற உதாரணத்திற்கு ஏற்ற மாதிரி மணிமேகலை போராடி வந்திருக்கிறார். அதாவது விஜய் டிவியில் குக் வித்த கோமாளியில், கோமாளியாக பங்கு பெற்ற மணிமேகலை கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய கனவை நினைவாக்கும் விதமாக தொகுப்பாளனியாக மாறுவதற்கு அதிக அளவில் முயற்சி எடுத்தார்.
அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மணிமேகலை களம் இறங்கினார். ஆனால் அதில் போட்டியாளராக பங்கு பெற்ற பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மணிமேகலை இந்த சீசனில் இருந்து வெளியேறி விட்டார். பிறகு தனக்கு நடந்த அநியாயத்தை சேனல் தரப்பில் இருந்து கேட்கவில்லை என்ற ஆதங்கத்தில் விஜய் டிவியில் இருந்து வெளியேறினார்.
பிறகு மணிமேகலை மீது எந்த தவறும் இல்லை என்று மக்கள் தொடர்ந்து ஆதரவளித்ததை சந்தோசமாக குறிப்பிட்டு இருந்தார். பிறகு ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மணிமேகலை நுழைந்தார். மணிமேகலை பற்றி சொல்ல தேவையே இல்லை, அந்த அளவிற்கு அதில் கலந்துகொண்டு என்டர்டைன்மென்ட் பண்ணி ஜட்ஜ் மற்றும் மக்களையும் கவர்ந்தார்.
அதனால் தான் அவருக்கு பெஸ்ட் என்டர்டைன்மென்ட் தொகுப்பாளனி என்ற அவார்டு கிடைத்திருக்கிறது. இதுதான் மணிமேகலையின் கனவு, தற்போது அவருடைய கனவு நினைவாகிவிட்டது.
இதற்கு முக்கிய காரணம் பிரியங்கா உடன் விஜய் டிவியில் ஏற்பட்ட மோதல் என்று கூட சொல்லலாம். இல்லையென்றால் விஜய் டிவியில் ஏதாவது ஒரு இடத்தில் உருட்டிக்கொண்டே இருந்திருப்பார். ஆனால் பிரியங்கா மணிமேகலை உடன் மோதியதால் தான் ஜீ தமிழுக்கு சென்று தகுந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
தற்போது இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததை ஒட்டி என்னுடைய கடைசி ஷூட்டிங் நாள் என்று உருக்கமான போஸ்ட்டை போட்டு ஆதரவு கொடுத்த மக்களுக்கும் சேனலுக்கும் நன்றியை தெரிவித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விட்ட இடத்தை பிடித்து விடுவார்.