தமிழ் சினிமாவின் வரலாற்றில் ரஜினிகாந்த் என்ற பெயர் என்பது வெறும் நட்சத்திரம் அல்ல அது ஒரு பிரமாண்டமான அலை. எத்தனை தடவைகள் அவர் மீது சந்தேகங்கள் எழுந்தாலும் ஒவ்வொரு முறையும் அவர் மீண்டு வந்து வெற்றியை புதிதாக வரையறுத்துள்ளார். “ஒருபோதும் அவரை குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்பதற்கான உயிர் சான்று இவர்.
1980 ல் வெளிவந்த பில்லா அந்த காலத்தில் தனி ஹீரோவாக அவர் மீது சந்தேகம் இருந்தது. ஆனால் பில்லா ஸ்டைலிஷ் மாஸ் பிளாக்பஸ்டராக மாறி அவரது கேரியரை புதிய திசையில் கொண்டு சென்றது. இதுவே முதல் பெரிய திருப்பம்.
1999 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படையப்பா பாஷா படத்திற்கு பிறகு அவரது புகழ் குறையும் என பேச்சுகள் வந்தது. ஆனால் படையப்பா படம் யாரும் எதிர்பாராத அளவில் வசூல் சாதனைகள் புரிந்தது. இதன் மூலம் அவர் மீண்டும் உச்சிக்கு திரும்பினார்.
சூப்பர்ஸ்டார்கம்பேக் கொடுத்த படங்கள்
பாபா தோல்விக்கு பின் 2007 இல் சந்திரமுகி என்ற ஹாரர் காமெடி படம் வெளிவந்து 890 க்கும் மேற்பட்ட நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது. இது அவரது நீண்டகால வெற்றியின் அடையாளமாக இருந்தது.
2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் VFX காலத்தில் அவர் பொருந்துவாரா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் எந்திரன் அப்போது இந்தியாவின் மிகச் செலவான படமாகவும் பான் இந்தியா வெற்றியாகவும் திகழ்ந்தது. இது அவருக்கு பெரிய அளவில் பேசப்பட்ட படம்.
லிங்கா மற்றும் கோச்சடையான் தோல்விகளுக்கு பின் 2016 இல் ரிலீஸ் ஆன கபாலி முதல் வார இறுதியில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. வெளிநாடுகளிலும் அதிரடி வெற்றியைப் பெற்றது.
2023 ல் ஜெய்லர் படத்தில் மீண்டும் வயதான ஹீரோவாக திரையில் வந்த போதும்இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்து அவரது ஆற்றலை நிரூபித்தது.
ரசிகர்கள் பெரும் அளவில் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் கூலி படம் ‘A’ சான்றிதழ் சந்தேகங்களையும் தாண்டி வெளியீட்டுக்கு முன்பே வட அமெரிக்காவில் ₹12 கோடி வசூல் சாதனை படைத்தது. ரஜினி சம்பளம் ₹150 கோடி இதனால் அவர் ஆசியாவின் மிக உயர்ந்த நடிகர் ஆனார்.
தோல்வி வந்தாலும் மீண்டும் உச்சியை அடைவது ரஜினிகாந்தின் குணம். அவர் யானை அல்ல வேகமாக பாயும் குதிரை தடைகளைத் தாண்டி அடுத்த இலக்கை அடையும் வீரன்.