அஜித், விஜய், ரஜினி மாதிரி பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுக்க வேண்டுமானால் அந்த தயாரிப்பாளர் குறைந்தது 500 கோடியாவது வைத்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் கையில் அவ்வளவு தொகைகள் இருக்கும் பட்சத்தில் தான் இந்த ஹீரோக்களின் படங்களை பற்றி யோசிக்க வேண்டும்,
இந்த மூன்று ஹீரோக்களின் சம்பளமே குறைந்தது 200 கோடிகள் வரை வந்து விடும். அதுபோக படத்தின் பட்ஜெட் ஒரு 300 கோடிகள், இதர செலவுகள் ஒரு 50 கொடிகள் , என மொத்தமாய் 550 கோடிகள் வேண்டும். ஆக தயாரிப்பாளர்களுக்கு இது பெரும் நெருடலாக இருக்கும்.
இப்பொழுது ஆதித் ரவிச்சந்திரன், அஜித்தின் அடுத்த படத்திற்கு தலைகீழாக நின்று கொண்டு தயாரிப்பாளர்கள் தேடும் வேலையில் இறங்கி விட்டார். லைக்கா, வேல்ஸ் நிறுவனம், மைத்திரி மூவி மேக்கப் என எல்லோரும் ஜகா வாங்க, இந்த ஃபேன் பாய் ஆதிக் முழித்துக் கொண்டிருக்கிறார்
அஜித், படம் சம்பந்தமான அக்ரிமெண்டில் பிள்ளையார் சுழி போடும்போதே 55 கோடிகள் கேட்கிறாராம். இதுல ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தை வைத்து இயக்கும் அடுத்த படத்தில் மோகன்லால் நடிக்க உள்ளாராம். மோகன்லால் போல் ஒரு பெரிய நடிகரை கமிட் செய்வதற்கு இன்னும் பல நூறு கோடியில் வேண்டும்.
மோகன்லாலுக்கு சம்பளம் என்று பார்த்தால் குறைந்தது 100 கோடி கொடுக்க வேண்டும். அதில் அட்வான்ஸ் தொகையாக படத்திற்கு முன்னர் 20 கோடிகள் வேணும். ஆக மொத்தம் இந்த படத்திற்கு பூஜை போடுவதற்கு முன்பு குறைந்தது 80 கோடிகள் இருந்தால் தான் யோசிக்கவே முடியும்.