Simbu: வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுச்சு என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். அதைத்தான் சிம்பு இப்போது செய்திருக்கிறார். சிம்பு மீண்டும் பார்முக்கு வந்து முதற்கட்ட நடிகர்களின் லிஸ்டில் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ரசிகர்களின் ஆசை.
வெந்து தணிந்தது காடு படம் இந்த விஷயத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. இதை தொடர்ந்து பத்து தலை மற்றும் தக் லைப் போன்ற படங்கள் சிம்புவுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
பஞ்சாயத்தை கிளப்பிய சிம்பு
இப்படிப்பட்ட சமயத்தில் தான் வெற்றிமாறனுடன் இணைந்து வடசென்னை மையமாக வைத்து சிம்பு ஒரு படம் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி உறுதியானது. சட்டுபுட்டு என்று வேலையை ஆரம்பிப்பார்கள் என்று பார்த்தால் இன்று வரை படப்பிடிப்பு பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.
படப்பிடிப்பு தள்ளிப் போவதற்கு சிம்பு தான் காரணமாம். ஆரம்பத்தில் வருகிற லாபத்தில் இத்தனை பர்சன்டேஜ் என பேசி படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ப்ரோமோ சூட் எல்லாம் எடுத்த பிறகு அந்தர் பல்டி அடித்து 45 கோடி சம்பளமாக கொடுத்து விடுங்கள் என்று பேசி இருக்கிறார்.
இது தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு திருப்தியாக இல்லை. இது குறித்த பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம் அதே நேரத்தில் சிம்பு தரப்பினரிடம் கேட்டபோது அவர்கள் வடசென்னை சம்பந்தப்பட்ட செட்டுகள் போடப்பட்டு கொண்டிருக்கிறது.
சிம்பு தற்போது தாய்லாந்து நாட்டில் இருக்கிறார். படப்பிடிப்புக்கு எல்லாம் தயாரான பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார். மற்றபடி இந்த படம் டிராப் ஆகிவிட்டது என்று சொல்வதெல்லாம் சுத்த பொய் என சொல்லி இருக்கிறார்கள்.