புது சீரியல் மூலம் டாப் கியரில் போகும் சேனல்.. சன் டிவி சேனலையே டம்மியாக்கிய ட்ரெண்டிங் சீரியல்கள் – Cinemapettai

Tamil Cinema News

Serial: ஒரு காலத்தில் சீரியல் என்றாலே அது சன் டிவி மட்டும் தான் என்று மக்களிடம் ஒரு பெயர் இருந்தது. ஆனால் அதை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கும் விதமாக விஜய் டிவி சேனலும் சீரியல்களை கொண்டு வர ஆரம்பித்தது. அதன் பின் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களை மக்கள், மாத்தி மாத்தி பார்க்க ஆரம்பித்தார்கள்.

தற்போது இந்த இரண்டு சேனலுக்கும் போட்டியாக வந்த ஜீ தமிழ் சீரியல்களும் மக்களின் ஃபேவரிட் சேனலாக இடம் பிடித்து விட்டது. முழுக்க முழுக்க ஜீ தமிழ் சேனல் சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எந்த மாதிரி கதை இருந்தால் மக்கள் சீரியல்களை விரும்பி பார்ப்பார்கள் என்பதை நன்றாக புரிந்து அதற்கு ஏற்ற மாதிரி கதைகளை கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

அதுவும் இப்பொழுது வந்த புது சீரியல்கள் எல்லாமே மக்களை கவர்ந்திருக்கிறது. ஏற்கனவே கார்த்திகை தீபம், அண்ணா, சந்தியா ராகம், வீரா போன்ற சீரியல்கள் மக்களின் பேவரைட் சீரியலாக இடம் பிடித்து விட்டது. அடுத்ததாக இந்த வரிசையில் கெட்டிமேளம் மற்றும் மனசெல்லாம் என்ற சீரியலும் புத்தம் புதுசாக வந்து மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது.

இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக வந்த சீரியல் அயலி. ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே இந்த சீரியலுக்கு அடிமையாகி விட்டோம் என்று சொல்வதற்கு ஏற்ப மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். முக்கியமாக விறுவிறுப்பான கதைகளும், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அயலி சீரியல் மக்களின் பேவரைட் ஆக இடம் பிடித்திருக்கிறது.

ஏற்கனவே சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் கம்மியான புள்ளிகளை பெற்று வருகிறது. இன்னும் இப்படியே போனால் சன் டிவி சேனலையே டம்மியாக்கும் அளவிற்கு விஜய் டிவி சீரியல் மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் டாப் இடத்திற்கு வந்துவிடும்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.