Ramayana: இந்திய சினிமா புதுமையான கதைக்களத்துடன் ஆஸ்கார் விருதுக்கு போட்டி போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், திடீரென ராமரும், விஷ்ணுவும், சிவனும் சினிமாவை ஆட்கொண்டது போல் தெரிகிறது.
அதிலும் பெரிய பெரிய ஸ்டால்களை ஹீரோக்களாக நடிக்க வைத்து பான் இந்தியா படங்களாகத்தான் இந்த புராண கதைகள் உருவாகி கொண்டிருக்கின்றன. கல்கி, கண்ணப்பா, ராமாயணம் என தொழில் நுட்பங்கள் உதவியோடு புராணக் கதைகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
சினிமாவை அஸ்திரமாக்கிட்டாங்களே!
இதற்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் ஒளிந்து இருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி பேசியிருக்கிறார். அதாவது இந்து மதத்தை இந்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் குறிப்பிட்ட இந்துத்துவா அமைப்புகளால் இந்த படங்கள் எடுக்கப்படுகின்றன.
புராணக் கதைகளை போராடச் சொன்னால் யாரும் கவனிக்க மாட்டார்கள் என புராணத்தில் வாழ்ந்தவர்களை கூட கதையில் மாடர்னாக காட்டி இளம் தலைமுறையினரை இழுக்கிறார்கள்.
இந்து அமைப்பிலிருந்து யாரும் விலகி விடக்கூடாது என்பதற்காகத்தான் இது செய்யப்படுகிறது என பிஸ்மி பேசி இருக்கிறார். மேலும் இந்த படங்கள் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமானால் பல கோடிகளில் பிரமோஷன் வேலைகள் வேறு நடக்கிறதாம்.
சமீபத்தில் வெளியான கண்ணப்பா படத்திற்கு விமர்சனங்கள் கொடுக்கக் கூடாது என குறிப்பிட்ட அமைப்பு சினிமா விமர்சகர்களுக்கு மிரட்டல் விடுத்ததெல்லாம் இதில் குறிப்பிடத்தக்கது.