விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தை ஒரு சிலர் பாலகிருஷ்ணன் நடித்த பகவந் கேசரி படத்தின் ரீமேக் தான் என்கிறார்கள்.ஆனால் விஜய் அரசியல் களத்தில் இறங்கியதால் இந்த படத்தை முற்றிலும் ஒரு புரட்சி ஏற்படுத்தும் விதமாகவே உருவாக்கி இருக்கிறார் H.வினோத்.
இந்த படம் சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற சுற்று வட்டார பகுதியில் ஷூட்டிங் நடைபெற்று. படத்தில் முழுக்க முழுக்க அரசியல் சாயம்தான் தெரிகிறது, எலக்சன் பூத்தில் ஓட்டு போடுவது போன்ற காட்சிகளை ஒவ்வொரு இடத்திலும் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பெரும்பாலும் விஜய்யின் கடைசி படம் இதுவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் விஜய் முழுக்க முழுக்க இந்த படத்தில் இயக்குனர் வினோத்தை வைத்து அரசியல் சாயம் பூசி இருப்பார் என்பது சூட்டிங் ஸ்பாட்டிலேயே தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் வருவதாக தெரிகிறது. நேர்மையாக பணியாற்றும் அவருக்கு அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தால் பல பிரச்சினைகள் வருகிறது. இதனை தட்டி கேட்கும் வேண்டும் அதனால் நமக்கு ஆளுமை வேண்டும் என அரசியல் அவதாரம் எடுக்கிறார் என்பதுதான் எச் வினோத் ஸ்டைலில் இருக்கும்.
மேலும் தமிழக வெற்றி கழகம் கட்சிக் கூட்டத்தில் விஜய்யின் வலது கரம் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில் , த வெ க முதல்வர் வேட்பாளர் யார் என்று தெரியுமா என்று உள்ளார். அதற்கு மக்கள் விஜய் என்று கூறியதும் இல்லை ஜெ வி( J V) என்றார். அனைவரும் ஜோசப் விஜய் என்று கூறியதற்கு மறுத்து ஜனநாயகன் விஜய் என அட்ராசிட்டியை கிளப்பினார்.