Pooja Hegde : பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதன் பிறகு விஜய் உடன் இணைந்து நடித்த பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைத்தொடர்ந்து தெலுங்கில் ஆச்சாரியா மற்றும் ராதே ஷாம் போன்ற படங்களில் நடித்த நிலையில் அவையும் தோல்வி உற்றதால் ராசி இல்லாத நடிகை என்ற பெயரை வாங்கினார். பெரிய ஹீரோக்களின் படங்கள் இவரால் பிளாக் ஆகிறது என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.
இந்த சூழலில் இப்போது நம்பர் ஒன் நடிகை என்ற பெயரை வாங்கி இருக்கிறார். விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் நிலையில் கூலி படத்தில் இப்போது ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடலும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இப்போது பூஜா ஹெக்டே போல் ராசி இல்லாத நடிகை என்ற பெயரை கீர்த்தி செட்டி பெற்றிருக்கிறார்.
தி வாரியர் மற்றும் கஸ்டடி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் கீர்த்தி செட்டி. இப்போது தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
பூஜா ஹெக்டே போல் ராசி இல்ல என முத்திரை குத்தப்பட்ட நடிகை
அதேபோல் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக வா வாத்தியாரே மற்றும் சாம் ஆண்டனி இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஜீனி படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் இந்த மூன்று படங்களின் ரிலீஸ் தேதியுமே தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
குறிப்பாக விக்னேஷ் சிவன் பிறந்தநாள் அன்று பிரதீப் ரங்கநாதனின் படம் வெளியாக இருந்தது. ஆனால் தயாரிப்பு பணி மற்றும் பிரமோஷன் ஆகிய காரணங்களினால் இப்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப் படக்குழு முடிவு செய்திருக்கிறது. கீர்த்தி செட்டியின் ராசி தான் அவரது படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பூஜா ஹெட்டேவும் ஆரம்பத்தில் இதே நிலைமையை சந்தித்த நிலையில் இப்போது முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அதேபோல் கீர்த்தி செட்டியும் வளர்ந்து வருவார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.