பெரும் புள்ளிகளின் இமேஜை அசைத்து பார்த்த 5 இளம் இயக்குனர்களின் வெற்றி.. துவம்சம் பண்ணிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – Cinemapettai

Tamil Cinema News

Tourist family: யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்வார்கள், அப்படித்தான் இப்போது தமிழ் சினிமாவின் பெரிய இயக்குனர்களின் நிலைமை ஆகிவிட்டது. சாதாரண கதைகளம் மிக குறுகிய பட்ஜெட் என இளம் இயக்குனர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், மிகப் பெரிய பட்ஜெட், உச்ச நட்சத்திரங்களின் கூட்டணி, ஏகப்பட்ட விளம்பரங்கள் என்று இறங்கியும் பெரிய இயக்குனர்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டு வருகிறார்கள்.

அப்படி தமிழ் சினிமாவின் பெரிய இயக்குனர்களின் இமேஜை அசைத்துப் பார்த்த ஐந்து இயக்குனர்களின் வெற்றியை பற்றி பார்க்கலாம்.

லவ் டுடே: பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் தான் லவ் டுடே. படத்தின் போட்டு மொத்த பட்ஜெட் 5 கோடி.

சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சத்யராஜ் மற்றும் ராதிகாவை தாண்டி பெரிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இல்லை. இரண்டு இளம் காதலர்களுக்கு இடையே நடக்கும் எதார்த்தமான பிரச்சனையை படமாக்கி 50 கோடி வரை லாபம் பார்த்தார் பிரதீப்.

லப்பர் பந்து: 2024 ஆம் ஆண்டு ரிலீசான லப்பர் பந்து படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சை முத்து.

நடுத்தர வயதில் இருக்கும் கணவன் மனைவி, இளம் காதலர்கள், இரண்டு தலைமுறைக்கு நடுவே இருக்கும் ஈகோ பிரச்சனை என எதார்த்தமான கதைக்களத்தை கொண்ட படம் இது. இந்த படம் பட்டித் தொட்டி எங்கும் பெரிய ஹிட் அடித்தது.

குட் நைட்: விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன் நடித்த மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் குட் நைட். நடுத்தர குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான வாழ்வியலை அழகாக எடுத்துச் சொன்ன படம் இது.

ஒரு இடத்தில் கூட முகம் சுளிக்காமல் புன்முறுவலுடனும், வயிறு குலுங்க சிரிக்கவும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம். இதன் பட்ஜெட் வெறும் 4 கோடி தான், ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே 10 கோடி வரை வசூல் செய்தது.

மகாராஜா: விஜய் சேதுபதிக்கு 50 ஆவது படமாக அமைந்ததுதான் மகாராஜா. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 190 கோடி வசூல் செய்தது. மேலும் இந்த படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய இயக்குனர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள்.

டூரிஸ்ட் ஃபேமிலி: இயக்குனர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

இந்த படம் ஏழு முதல் எட்டு கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 94 கோடி வசூல் செய்தது.

சமீபத்தில் ரிலீசான படங்களில் தென்னிந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பாராட்டும் அளவுக்கு இந்த படம் அமைந்திருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.