சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான அமரன் படம் வசூலில் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால், அவரது அடுத்த படமான மதராஸி குறித்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், இந்த படத்தை இயக்கியிருப்பவர் ஏஆர் முருகதாஸ் என்பதால், படத்திற்கு இருக்கும் ஹைப் இன்னும் அதிகரித்துள்ளது.
அதிக விலை நிர்ணயம் – விநியோகஸ்தர்கள் பின்வாங்கல்
ஆனால், மதராஸி பட தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் , அமரன் படத்தின் வசூலை அடிப்படையாகக் கொண்டு, தியேட்டர் உரிமைக்கு மிக அதிக விலையை நிர்ணயித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விலையை தற்போது தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் எந்த விநியோகஸ்தருக்கும் ஏற்று கொண்டதாக தெரியவில்லை. அதனால், முக்கியமான மூன்று மாநிலங்களிலும், படம் இன்னும் விற்பனை ஆகாமல் காத்துக்கிடக்கிறது.
ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் சிக்கல்
மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி (செப்டம்பர் 5) நெருங்கிக் கொண்டே வருகிறது. ஆனால், படத்தின் தியேட்டர் உரிமை விநியோகஸ்தர்களிடம் போகவில்லை என்பதால், வெளியீடு தொடர்பான குழப்பம் அதிகரித்து வருகிறது. ரிலீஸ் பிளான் இன்னும் உறுதியாவதில்லை என்பதும், ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் மற்றும் திரையுலகில் நிலவும் பேச்சு
அமரன் படத்தின் வசூல் சிவகார்த்திகேயனின் மற்ற படங்களுக்கு பொருந்தாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அமரன் படத்தின் கதைக்களம் என்பது வேறு விதமானது. இதே வசூலை மதராசி படத்துக்கு எதிர்பார்ப்பது என்பது கொஞ்சம் தவறான போக்கு என்பது தான் ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
அடுத்த கட்டம் என்ன?
இப்போது கேள்வி என்னவென்றால் – தயாரிப்பாளர் விலையை குறைத்து, விநியோகஸ்தர்களுடன் சமரசம் செய்வாரா? அல்லது கடைசி நேரத்தில் பெரிய நிறுவனம் களமிறங்கி படத்தை கைப்பற்றுமா? என்பது தான்.