தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அக்டோபர் மாதம் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கிறது. ஏனென்றால், ஒரே நாளில் இரண்டு ஹைபான படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. த்ருவ் விக்ரம் நடித்த பைசன் மற்றும் பிரதேப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் எல்.ஐ.கேஅக்டோபர் 17ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளன.
இந்த இரண்டு படங்களும் Netflix நிறுவனத்தால் டிஜிட்டல் ரைட்ஸ் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால், ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட் என்ன தெரியுமா?
பைசன் (Dhruv Vikram): திரையரங்கில் ரிலீஸ் ஆன 4 வாரங்களுக்குப் பிறகு Netflix-இல் ஸ்ட்ரீம் ஆகும்.
எல்.ஐ.கே (Pradeep Ranganathan): திரையரங்கில் ரிலீஸ் ஆன 8 வாரங்களுக்குப் பிறகு Netflix-இல் ஸ்ட்ரீம் ஆகும்.
இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கேள்வி எழுப்புகிறது – “Box Office-இல் யார் வெல்வார்கள்?”
பைசன் – துருவ் விக்ரம் ரசிகர்களின் கொண்டாட்டம்
விக்ரம் மகன் த்ருவ், ஆதித்ய வர்மாக்கு பிறகு எடுக்கிற மிக முக்கியமான படம் இது. ஆக்ஷன், எமோஷன் கலந்த கதை என ட்ரைலரிலேயே பளிச்சென தெரிய வந்துவிட்டது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
எல்.ஐ.கே – பிரதீப் ரங்கநாதன் காமெடி ரொமான்ஸ் மாஸ்டர் பிளான்
லவ் டுடே வெற்றிக்குப் பிறகு, பிரதீப் ரங்கநாதன் எந்த படத்தை எடுக்கிறார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இப்போது எல்.ஐ.கே மூலம் மீண்டும் ரொமான்ஸ் + காமெடி கலந்த படம் கொடுக்கிறார். சிங்கிள்ஸும், கபிள்ஸும் இதற்காகவே காத்திருக்கிறார்கள்.
Netflix Strategy
OTT ரிலீஸ் களில் எப்போதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம். பைசன் 4 வாரத்தில் வரும் என்பதால், விரைவில் Netflix பார்வையாளர்களை ஈர்க்கும். ஆனால் எல்.ஐ.கே 8 வாரம் காத்திருக்க வைக்கும் என்பதால், திரையரங்க பிஸினஸை மேக்ஸிமம் புஷ் செய்யும்.
Box Office Clash – ரசிகர்களின் குழப்பம்
அக்டோபர் 17ம் தேதி புக்கிங் ஓபன் ஆனவுடன், இரு படங்களும் ஹவுஸ்ஃபுல் போகும் வாய்ப்பு அதிகம். “துருவ் விக்ரமா? பிரதீபா?” என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் சுற்றிக்கொண்டே இருக்கும்.