Memes: சோசியல் மீடியாவில் அன்றாடம் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்து வருகிறது. அதை நெட்டிசனங்களும் கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். சீரியஸான விஷயங்கள் கூட இப்படித்தான் ட்ரோல் செய்யப்படுகிறது.

அப்படித்தான் போன மாதம் முழுக்க கூமாபட்டி ட்ரெண்டிங்கில் இருந்தது. எங்க திரும்பினாலும் ஏங்க கூமாபட்டிக்கு வாங்கன்னு சொல்லும் வீடியோ தான் அலப்பறை கொடுத்தது.

அது ஒரு வழியாக முடிந்து போன நிலையில் இந்த மாதம் நெட்டிசன்களை என்டர்டைன் செய்து கொண்டிருப்பது நம்ம மாதம்பட்டி ரங்கராஜ் தான். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்த கதைதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிலும் இரண்டாவது மனைவி திருமணம் நடக்கும்போது ஆறு மாத கர்ப்பம் வேறு. விடுவார்களா இணையவாசிகள் இவரை போட்டு பொளந்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க ஜூலை மாதம் போகவே மாட்டேங்குதே என நச்சரித்தவர்கள் டேய் ஆகஸ்ட் எப்படா வந்த என அதையும் கிண்டல் அடிக்கின்றனர். மாசம் மாறினாலும் நம்ம வாழ்க்கை மட்டும் மாறப்போவதில்ல.

போன மாசம் என்ன நடந்துச்சோ அதைவிட இந்த மாசம் இன்னும் பயங்கரமா இருக்கும். முன்னேற்றம் ஒன்னும் இருக்காது என வழக்கம் போல பிரச்சனைகள் இருந்தாலும் அதையும் ஜாலியாகவே சொல்கிறார்கள் இணையவாசிகள்.

இப்படி இன்று ஆகஸ்ட் மாதம் தொடங்கியதை சோசியல் மீடியா மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்ற மீம்ஸ் தொகுப்பு இதோ.