போயஸ் கார்டனில் மீண்டும் இணையும் தனுஷ்-ஐஸ்வர்யா.. பிரபலம் ஓப்பன் டாக் – Cinemapettai

Tamil Cinema News

Dhanush : நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஆனால் சமீபத்தில் தனது மூத்த மகன் யாத்ரா பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பட்டம் பெற்றார்.

அப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது மகனை கட்டி தழுவி முத்தம் கொடுத்திருந்தனர். அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குழந்தைகளுக்காகவாவது இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று கூறி வந்தனர். இந்த சூழலில் போயஸ் கார்டனில் ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் இருக்கிறார்.

மீண்டும் ஒன்றாக சேர போகும் ஐஸ்வர்யா தனுஷ்

அவர் கூறியிருப்பது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்றாலும் கண்ணியமாக இருந்தார்கள். தங்களுடைய மகனின் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். இதை பார்க்கும் போது ரஜினியும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

அதோடு தனுஷ் இப்போது போயஸ் கார்டனில் வீடு கட்டி குடியேறி இருக்கிறார். மகன்களுக்காக மீண்டும் இவர்கள் இருவரும் போயஸ் கார்டனில் ஒன்றாக சேர்ந்து வாழ இருக்கின்றனர் என்றும் பயில்வான் கூறி இருக்கிறார்.

பயில்வான் சொன்னது உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. மேலும் தனுஷ் இப்போது குபேரா மற்றும் இட்லிகடை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்த மாதம் அவரது குபேரா படம் திரைக்கு வர இருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.