தமிழ் சினிமாவில் வாரந்தோறும் பல படங்கள் வெளியாகின்றன. அதில் எல்லா படங்களும் வெற்றி பெற முடியாது. சமீபத்தில் வெளியாகிய மதராஸி, காந்தி கண்ணாடி, Bad Girl ஆகிய மூன்று படங்களும் box office-ல் தோல்வியடைந்தன.
இந்த மூன்று படங்களும் வெளியீட்டுக்கு முன்பு பேசப்பட்டாலும், வெளியீட்டுக்குப் பிறகு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
காந்தி கண்ணாடி – குற்றச்சாட்டு என்ன?
‘காந்தி கண்ணாடி’ படத்தின் ஹீரோவும் இயக்குனரும், படம் தோல்வியடைந்ததற்கு:
- போதுமான தியேட்டர்கள் தரவில்லை.
- பேனர்கள் கிழிக்கப்பட்டது என்று படத்தின் ஹீரோ KPYபாலாவும் இயக்குனரும் குற்றம்சாட்டினர்.
திருச்சி ஶ்ரீதரின் விளக்கம்:
ஆனால், திருச்சி ஶ்ரீதர் என்ற தியேட்டர் ஓனர், இந்த குற்றச்சாட்டை deny செய்துள்ளார். அவர் கூறியதாவது:
“இப்படி எதுவும் நடக்கவில்லை. தியேட்டர்கள் குறைவு இல்லை. போஸ்டர் கிழிப்பு நடந்ததாக எதுவும் ஆதாரம் இல்லை. படத்தை ப்ரமோட் செய்யவே அப்படிச் சொன்னார்களாம்.”
இதன் மூலம், ‘காந்தி கண்ணாடி’ குழுவின் குற்றச்சாட்டு சரியாக உறுதி செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.
தோல்விக்கு உண்மையான காரணம்?
திரைப்படம் ஓட வேண்டுமென்றால்:
- Content (கதை + திரைக்கதை )
- Promotion
- Word of mouth
முக்கிய பங்கு வகிக்கின்றன. காந்தி கண்ணாடிக்கும் மற்ற படங்களுக்கும் இந்த மூன்றிலும் பெரிய positive buzz இல்லை. Audience connect ஆகவில்லை. அதனால தான் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.