தனுஷ் குபேரா படம் முடிந்தவுடன் 15 நாட்கள் பிரேக் எடுத்துக் கொண்டார். அந்த நாட்களில் மகன்களுக்காகவும், இட்லி கடை படத்தின் சின்ன சின்ன வேலைகளை பார்ப்பதற்காகவும் ஒரு சின்ன இடைவெளி விட்டிருந்தார். இப்பொழுது இட்லி கடை படம் பட்டி டிங்கரிங் பார்த்து முடிச்சாச்சு.
அக்டோபர் ஒன்றாம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளி வந்தது. இந்த படத்துக்கு போட்டியாக அக்டோபர் இரண்டாம் தேதி காந்தாரா படம் ரிலீசாக உள்ளது. இப்பொழுது தனுஷ் அடுத்த கட்ட வேளையில் இறங்கியுள்ளார்.
கிடைத்த கொஞ்ச நாள் ரெஸ்டில் மகன்களுடன் வெளிநாடு செல்ல ஆயத்தமான அவருக்கு விசா பிரச்சனை வந்ததால் எல்லாம் ட்ராப்பானது. இதனால் அடுத்த படத்தின் வேலையை ஆரம்பிக்கலாம் என தனுஷ் தன்னுடைய D54 க்கு ஆயத்தமாகிவிட்டார்.
ஜூலை 10ஆம் தேதி பௌர்ணமி நாளன்று இந்த படத்தின் பூஜை வெகு சிறப்பாக ஈசிஆரில் போட உள்ளனர். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அதில் ஒருவர் ஜெயராம். மற்றொருவர் வீரதீர சூரன் படத்தின் வில்லன் நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு.
ஆரம்பத்தில் D54 படத்திற்கு டிராகன் பட புகழ் கயாடு லோகர் தான் ஹீரோயினாக பேசப்பட்டு வந்தார். அவரது பிஸியான ஷெடியூல் காரணமாக இப்பொழுது இந்த படத்தில் மம்தா பஜ்லூ நடிக்கிறார். இந்த படத்தில் ஜெயராம் முதல் சூரஜ் வரை மலையாள நடிகர்கள் தான் நடிக்கிறார்கள் ஹீரோயின் மம்தாவும் மலையாளம் தான்.