Mahanathi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி விஜய்க்கு சப்போர்ட்டாக நவீன் உதவி செய்து வருகிறார். காவேரி விஜய் என்ன மாதிரி ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாத யமுனா, நவீன் காவிரியிடம் பேசுவதை பார்த்து தவறாக புரிந்து கொள்கிறார். முதலில் இருந்து யமுனாவிற்கு நவீன் ]காவிரி மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
தற்போது இவர்கள் பேசுவதை பார்த்து இன்னும் அதிகமாக சந்தேகமாகி நவீன் இடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார். நவீன், யமுனா இப்படித்தான் என்று புரிந்து கொண்டு உதாசீனப்படுத்தினாலும் யமுனா சும்மா விடாமல் உங்க இரண்டு பேருடைய பழக்கத்தை நான் என் குடும்பத்திற்கு தெரியப்படுத்துகிறேன் என்று பிளாக்மெயில் பண்ணும் அளவிற்கு நவனிடம் சண்டை போடுகிறார்.
ஆனால் நவீன் நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ என்று போய்விடுகிறார். பிறகு விஜய் வீட்டில் இருக்கும் காவிரியை கூட்டிட்டு சாரதா வீட்டுக்கு போவதற்கு நவீன் வந்து விட்டார். அதன்படி காவிரியை கூட்டிட்டு நவீன் கிளம்பி விடுகிறார். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் வெண்ணிலாவின் நிலைமை என்ன, பசுபதி வந்தாரா என்று விஜய் போன் பண்ணி விசாரிக்கிறார்.
ஆனால் அங்கு இருக்கும் விஜய்யின் நண்பர் ஒருவர், பசுபதி வரவில்லை. வெண்ணிலாவுக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சுயநினைவு வந்துவிடும் என்று சொல்கிறார். உடனே விஜய், காவிரியிடம் வெண்ணிலாவுக்கு சுயநினைவு வந்து விட்டால் நடந்த உண்மையை சொல்வாளா? இல்லையென்றால் என்னை பழிவாங்க வேண்டும் என்று பொய் சொல்வாளா? என்று குழப்பமாக இருக்கிறது என ஃபீல் பண்ணி பேசுகிறார்.
காவிரி எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி நவீனுடன் கிளம்பி விடுகிறார். ஆனால் இந்த பிரச்சனை பல மாதங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது இதற்கு முற்றுப்புள்ளியை இல்லையா என்பதற்கு ஏற்ப ஜவ்வு மாதிரி இழுத்து அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.