Kamalhasan : நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர். அது மட்டும் அல்லாமல் சினிமாவில் அனைத்து கலைகளிலும் கைதேர்ந்த ஒரு மாமனிதர். எழுத்து, இயக்கம், தயாரிப்பு என அனைத்து வித்தைகளையும் கற்று வைத்துள்ளார் நம்மவர்.
இவ்வாறு தமிழ் சினிமாவில் உச்சத்தில் ஒரு இருக்கும் ஒரு நடிகர் தான் அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப் போவதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு கட்சி ஆரம்பித்து நிறைய தொண்டர்களையும் பெற்றார். பின்பு தேர்தலில் பெரும்பான்மை இல்லாமல் தோற்றுப் போனார்.
தற்போது திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறார் கமல்ஹாசன். நிறைய இவரைப் பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் அதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வரும் தடைக்கற்கள் அனைத்தையுமே படிக்கற்களாக மாற்றி தன் ஒவ்வொரு செயலிலும் நினைத்ததை விட பல வெற்றிகளை குவித்து வருகிறார்.
புது ரூட்டை கையில் எடுத்த கமல்ஹாசன்..
தற்போது கூட ஆஸ்கர் குழுவில் இருந்து இவருக்கு அழைப்பு வந்து, மேலும் இவருக்கு பெருமையை தேடித் தந்தது. இவ்வாறு இருக்க இவர் தற்போது ஜூலை 25 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளாராம்.
அதாவது கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் அவர்கள் தேர்வாகியுள்ளார். அதனால் வரும் ஜூலை 25ஆம் தேதி மாநிலங்களவை எம்பியாக பதவி ஏற்க உள்ளார் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள்.
அரசியலில் நின்று நேரடியாக மக்களின் ஆதரவை பெற்று ஜெயிக்க முடியாத என்று எண்ணி இந்த முடிவை எடுத்துள்ளாரா? கமல்ஹாசன் என்ற கேள்வி எழுகிறது. அல்லது MP பதவிக்கு ஆசைப்படுத்தான் கட்சி ஆரம்பித்தாரா? எண்டு பல கேள்விகள் எழுந்துள்ளன.
வேறு எதாவது உள்நோக்கம் இருக்கிறதா? என்ற கேள்வியம் எழுகிறது. மக்களை நம்பி ஏமாந்து போனவரில் இவரும் ஒருவர் அவ்வளவுதான் அரசியல் களத்தில் என்று இதை எடுத்துக்கொள்ளலாமா என்று தெரியவில்லை. அரசியலை பொறுத்தவரை எந்த மாற்றம் எப்போது நிகழும் என கணிக்க முடியாது. ஆனால் நடிகர் கமல்ஹாசனின் இந்த நகர்வு இவரின் புத்திசாலித்தனத்தை கட்டுறது என்றும் வெளியில் பேசிக்கொள்கிறர்கள்.