Vijay : விஜய் கட்சி ஆரம்பித்தது இங்க சில நடிகர்களுக்கே பிடிக்கவில்லை. என்னதான் வெளிமப்புக்கு ஒருசில நடிகர்கள் வெளியில் பேசியிருந்தாலும் கூட உள்ளே அந்த சந்தோசம் இருக்குமா என்ற கேள்வி தான் எழுந்து வருகிறது.
ஏற்கனவே அரசியலுக்கு வருவதாக கூறி பிறகு வரவில்லை என அறிவித்தார் ரஜினி. ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை ஓகே நாம வரலாம் என்று வந்தவர்தான் கமல், இவர் இப்போது MP ஆகிவிட்டார்.
என்னதான் நாம் எதிர்பார்த்தாலும் அரசியல் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டார் அஜித் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஏற்கனவே நம் விஜயகாந்தை இழந்து தவித்து கொண்டிருக்கும் வேளையில் அரசியலுக்கு வந்தவர் தான் விஜய். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
ஊர்க்குருவி பருந்தாகாது என நினைத்திருந்த வேலையில், தற்போது விஜய்க்கு ஆதரவு அதிகரிக்க அரசியல்வாதிகள், ஏன் சில நடிகர்களுக்கு கூட பொறாமை வந்துவிட்டது போல. ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை அது முடிந்த விட்ட கதை .
ஆனால் தற்போது ரஜினி பேசுகையில் அனுபவமில்லாத கூட்டம் என்றுமே நினைத்த இடம் போய் சேராது எனவும், நான் கட்சி தொடங்கினால் “எனது ரசிகர்கள் பணத்தை இழப்பார்கள்” என்றும் கூறியிருப்பார்.
இதே போல் தற்போது 33 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையை நிறைவு செய்த அஜித் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் நிறைய விஷயங்கள் பகிரப்பட்டாலும் கூட அரசியல் பற்றி மறைமுக கருத்தும் உள்ளது. அதாவது நான் “என் ரசிகர்களை ஒருபோதும் சுயநலத்திற்காக பயன்படுத்த மாட்டேன்” என்றும் ஒரு கருத்தை எழுதியுள்ளார்.
மக்கள் நலனில் உங்கள் விஜய்..
இந்த இரண்டு கருத்துக்களும் விஜய் ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது. ஆகவே விஜய் ரசிகர்கள் இதற்கு விஜய் பதில் அளித்தால் எவ்வாறு இருக்கும் என யோசித்து கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.
அதாவது நான் எனது ரசிகர்களாகிய இளைஞர்களை மற்றவர் போல் போஸ்டர் ஒட்டவும், பால் அபிஷேகம் செய்ய மட்டும் பயன்படுத்தமாட்டேன். அவர்களை வைத்து சமூக மாற்றதை ஏற்படுத்தி அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வேன் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அதாவது ரஜினி அவர்களுக்கு சினிமாதான் எல்லாம். அஜித்திற்கு சினிமாவை தாண்டி அவருக்கு பிடித்தது ரேஸிங் அதை அவர் சிறப்பாக செய்கிறார். அதே போல விஜய்க்கு பிடித்தது அரசியல் அதனால் அவர் அரசியல் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார். இது அவரவர் விருப்பம், அவரவர்க்கு பிடித்த பாதையில் அவரவர் பயணித்தால் வெற்றி நிச்சயம் என சில பிரபலங்கள் கூறி வருகிறார்களாம்.