Vikram : விக்ரம் வீரதீர சூரன் என்ற வெற்றி படத்தை கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சாந்தி டாக்கிஸ் நிறுவனத்தின் அருண் விஸ்வா தயாரிப்பில் ஒரு படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் அந்த படம் டிராப்பானதாக தகவல் வெளியானது.
மடோன் அஸ்வின் கதை தயாரிப்பு நிறுவனம் மற்றும் விக்ரமுக்கு பிடிக்காததால் இந்த படம் கைவிடப்பட்டுள்ளது. இதனால் விக்ரம் வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் என்று செய்திகள் உலாவி வந்தது.
இந்த சூழலில் அருண் விஸ்வா தயாரிப்பில் தற்போது தியேட்டரில் சித்தார்த்தின் 3BHK படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தியேட்டருக்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
விக்ரம் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்
அப்போது பேசிய இவர் சில காரணங்களினால் படம் தள்ளிப் போவதாக கூறியிருக்கிறார். ஆனால் அடுத்ததாக விக்ரம் படத்தை தான் தயாரிக்க இருப்பதாக அப்டேட் கொடுத்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.
மேலும் தற்போது படம் டிராப் என்று உலாவி வந்த வதந்திக்கு அருண் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். மேலும் மடோனா அஸ்வின் மற்றும் அருண் விஸ்வா கூட்டணியில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வெளியாகி இருந்தது. இப்போது மீண்டும் இதே கூட்டணி உருவாக இருக்கிறது.
மேலும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு தேதி விரைவில் வெளியாக இருக்கிறது. விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 படம் வெளியான நிலையில் முதல் பாகமும் எடுக்க இருக்கின்றனர்.