தமிழ் சினிமாவுக்கு ஏராளமான மெகா ஹிட் படங்களை கொடுத்த முன்னணி இயக்குநர் மணிரத்னம். அவர் இயக்கிய வெற்றி மற்றும் தோல்வி படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
மணிரத்னம் இயக்கிய முதல் படம் பல்லவி அனுபல்லவி (1983) கன்னடத்தில் வெளியான இந்த படம் சராசரியாக ஓடியது. ஆனால், அவரது இரண்டாவது படம் உணராயோ (1984) மலையாளத்தில் வெளிவந்து, மோகன்லால் நடிப்பில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி கண்டது.
மணிரத்னத்தின் தமிழ் திரைப்பட தொடக்கம் ‘பகல் நிலவு’ (1985) – முரளி, ரேவதி நடித்த இப்படம் எதிர்பார்ப்பை ஏமாற்றிய பிளாப்.
‘இதய கோயில்’ (1985) – மோகன், ராதா நடிப்பில், இளையராஜா இசையுடன் வெளியான இப்படம், 200 நாள்கள் ஓடி சில்வர் ஜூபிலி ஹிட் ஆனது. இரண்டாம் முயற்சியிலேயே மணிரத்னம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
1986ல் வெளியான மௌனராகம், மோகன் மற்றும் ரேவதி நடித்த முக்கியமான காதல் படம். 200 நாட்கள் ஓடியது. மணிரத்னத்தின் மெகா ஹிட் வெற்றிப் படமாக உயர்ந்தது.
மணிரத்னம் இயக்கிய நாயகன் 1987 தீபாவளிக்கு வெளியாகி, 175 நாட்கள் ஓடிய இது ஒரு பிளாக்பஸ்டர் மற்றும் சில்வர் ஜூபிலி ஹிட் ஆனது.
1988 தமிழ் புத்தாண்டில் வெளிவந்த அக்னி நட்சத்திரம், 200 நாட்கள் ஓடி பிளாக்பஸ்டர் சில்வர் ஜூபிலி ஹிட் ஆனது.
அஞ்சலி 1990 – ல் ரகுவரன், ரேவதி நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. மக்கள் வரவேற்புடன், மூன்று தேசிய விருதுகள் பெற்ற முக்கியமான திரைப்படமாகும்.
பம்பாய் 1995 – ல் அரவிந்த் சாமி மற்றும் மனிஷா கொயரலா நடித்திருந்தார்கள். ஏஆர் ரகுமானின் இசையுடன், படம் பெரிய வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
மாதவன்-சிம்ரன் நடித்த ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ 2002ல் வெளியாகி ஏ ஆர் ரஹ்மானின் இசையுடன் சூப்பர்ஹிட் ஆனது. தேசிய மற்றும் மாநில விருதுகளை பெற்ற இந்த படம், விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.
ராவணன் (2010) திரைப்படம் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்தும், ஏஆர் ரகுமான் இசையிலும் வெளியானது. பெரிய எதிர்பார்ப்பை ற்படுத்தினாலும், தமிழ் மற்றும் ஹிந்தி இரண்டு மொழிகளிலும் படம் பிளாப் ஆனது.
கார்த்தி-அதிதி ராவ் நடித்த ‘காற்று வெளியிடை’ 2017 ல் ரிலீஸாகி, ஏ ஆர் ரஹ்மானின் இசையுடன் வந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு இடமளிக்காமல் படம் பிளாப் ஆனது.
பொன்னியின் செல்வன் (2022) வெற்றி பெற்ற படம் ஆகி, 500 கோடிக்கும் அதிகம் வசூலித்து சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சி பொன்னியின் செல்வன் பார்ட் 2 க்கும் நல்ல வரவேற்பு இருந்தாலும், முதல் பாகம் அளவுக்கு பெரிய வெற்றியடையவில்லை.
தக் லைஃப் (2025) திரைப்படம் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி இருந்தும், படம் பாக்ஸ் ஆபிஸ் பிளாப் ஆனதாக கருதப்படுகிறது. எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விமர்சனமும் வசூலிலும் தோல்வியடைந்தது.