Madhan Bob: குமரி முத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் தனித்துவமான சிரிப்புக்கு சொந்தக்காரராக இருந்தவர் தான் மதன் பாப். இவர் தன்னுடைய 71 வது வயதில் மரணம் அடைந்திருக்கிறார். இவருடைய திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
மதன் பாப் பிரண்ட்ஸ், பூவே உனக்காக, கிரி, பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களின் மூலம் மக்களிடையே நல்ல பரிச்சயமானவர். அது மட்டும் இல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.
அதோடு சேர்த்து சில டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். கடந்த சில வருடங்களாக மீடியாவில் தலை காட்டாமல் இருந்த இவர் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை 5 மணி அளவில் அவருடைய அடையாறு இல்லத்தில் உயிர் பிரிந்திருக்கிறது.