Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் திரையுலகத்திற்கு பெற்றுத்தந்த பெருமைகளும் மரியாதைகளும் ஏராளம். அது இன்றளவிலும் குறையவில்லை. இவ்வளவுக்கு வயதாகியும் தன் உழைப்பை நிறுத்தாமல் ஓடிக்கொண்டுள்ளார் தலைவர்.
அவர் படங்களில் பணியாற்ற இங்கு நிறைய நபர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள், அந்த வகையில் தானாக வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்து இங்கு ஒருநபர் கூறியுள்ளார்.அதாவது அவர் வேண்டுமென்றே மறுக்கவில்லை, அதே சமயத்தில் வேறொரு வாய்ப்பு வந்ததால் இதை மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா அவர்கள் தமிழில் சண்டக்கோழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தமிழில் ஏகப்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். மற்றும் ஹிந்தியிலும் ஏகப்பட்ட படங்களில் பணியாற்றி நல்ல படங்களை கொடுத்துள்ளார்.
ரஜினி பட வாய்ப்பை மறுத்த பிரபலம்..
பிரபல ஒளிப்பதிவாளரான இவர் தமிழில் சங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் படத்திற்கு பணியாற்ற அழைப்பு வந்த நிலையில், இவர் அந்த படத்திற் நிராகரித்துள்ளார். ஏனென்றால் இவர் அப்போது மதராசபட்டினம் படத்திற்காக பணியாற்ற கமிட் ஆகி இருந்தார்.
அதனால் மதராசபட்டினம் படத்தின் கவித்தன்மையை துல்லியமாக கொடுக்க வேண்டும் என்ற காரணதிக்காக ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ரஜினி படம் அல்ல எந்த படத்தின் அழைப்பாக இருந்தலும் மறுத்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.