Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் இவ்வளவு உயரத்தை அடைந்ததற்கு காரணம் நல்ல கதையை தேர்வு செய்வது தான், இவர் தேர்வு செய்யும் கதைகள் அனைத்துமே மக்களால் பெரும்பாலும் வரவேற்பை பெற்றுவிடுகின்றன.
அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கடின உழைப்பாலும் இவர் அடுத்தடுத்து நல்ல படங்களை செய்து வருகிறார். தற்போது சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களில் இவரும் ஒருவர்.
இவர் நடிப்பில் தற்போது வெளிவரவிற்கும் படம் தான் “மதராஸி” இந்த படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சென்னை பற்றிய கதையை அடிப்படையாக கொண்டு கதை இருக்கும் என மக்கள் நினைத்து கொண்டிருந்த வேளையில் தற்போது இந்த படத்தின் கதை இதுதான் என சில தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு அதிரடிப்படை கேங்கிற்கும், வட இந்திய மாஃபியா கும்பலுக்கும் இடையே நடக்கும் அதிரடியான காதல் கதையை மையமாக கொண்டு இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் காதல், தியாகம், நட்பு என அனைத்தும் கலந்த மசாலா படமாம், இதில் காதல், நட்பு என இரண்டிற்குமே முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இரண்டு கேங்-க்கும் இடையே நடைபெறும் பிரச்சினைகளுக்கு இடையே காதல், நட்பு ஆகிய இரண்டையும் எவ்வாறு சரிசெய்ய போகிறார் ஹீரோ என்பதுதான் கதையாம். “அமரன் ” சிவகார்த்திகேயனுக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது.
அதேபோல் “மதராஸி” படமும் சிவகார்த்தியேனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுமா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்த கேங்ஸ்டர் GETUP சிவகார்த்திகேயனுக்கு கைக்கொடுக்குமா? எதுவாக இருந்தாலும் படம் ரிலீஸ் ஆனதும் உறுதியாக தெரியவரும், அதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம்.