Vijay : நடிகர் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்து தந்து முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து தற்போது முழு அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார். இவர் அடுத்ததாக தனது இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார்.
இந்த மதுரை மாநாடு அறிவிப்பு வந்ததிலிருந்தே எக்கச்சக்கமான விமர்சனங்கள் நேர்மறையாகவும் ,எதிர்மறையாகவும் இருந்து வருகின்றன. இந்த மாநாடு விஜகாந்த் அவர்களின் பிறந்தநாள் அன்று நடக்கவுள்ளதால் இது மேலும் பிரபலமாக பேசப்படுகிறது.
ஜோசியரை நம்பும் விஜய்..
அதுமட்டுமல்லாமல் இவர் திட்டம் தீட்டிதான் கேப்டன் பிறந்தநாள் அன்று வைத்திருக்கிறார் என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டிருகிறது. இது ஒருபக்கம் இருக்க கூட்டணி பற்றியும் அவ்வப்போது புரளிகள் கிளம்பிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு தற்போது அவர் திட்டம் தீட்டியெல்லாம் வைக்கவில்லை அவர் எதார்தமாக தான் வைத்துள்ளார் என பேசியுள்ளார் வலைப்பேச்சு அந்தணன். இவர் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விஜய் அவர்கள் வேணுமென்று விஜய்காந்த் பிறந்தநாள் அன்று வைக்கவில்லை.
இப்போ பல அரசியல் அரசியல்வாதிகள் ஜோதிடக்காரர்களை கேட்டுத்தான் அடுத்த நகர்வை செய்கின்றனர். அதே போல் விஜயும் ஜோதிடக்காரரை கேட்டுத்தான் இத தேதியை வைத்திருப்பார். இது எதார்த்தமாக நடந்தது எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விஜய் அவர்கள் எதிர்ப்பார்த்ததை விட மதுரை மாநாட்டில் கூட்டம் அலைமோதபோகிறது. விஜயகாந்த் அவர்கள் மாநாட்டை விட அதிக கூட்டம் வரும் என வலைப்பேச்சு அந்தணன் பேசியுள்ளார்.