TVK-Vijay: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21 நடைபெற இருக்கிறது. 25 ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டு இப்போது சில நாட்கள் முன்னதாக நடைபெற இருக்கும் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விக்கிரவாண்டியில் கூடிய கூட்டத்தை விட பல லட்சம் மக்கள் அதிகமாக ஒன்றிணைவார்கள் என்றும் கணிப்புகள் சொல்கின்றன. அதன்படி பார்த்தால் 25 லட்சம் மக்கள் மாநாட்டிற்கு வர வாய்ப்பு இருக்கிறது.
அது மட்டும் இன்றி அந்த மாநாட்டில் விஜய் முக்கிய சில அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். அதில் கூட்டணி பற்றி சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி மாநாடு பற்றிய பேச்சு ஒரு பக்கம் இருக்க இது கட்சிக்கு சாதகமாக அமையுமா இல்லையா என்ற கேள்வியும் உள்ளது.
தளபதியின் அடுத்த பிளான்
ஏனென்றால் குறுகிய காலத்திலேயே விஜய்க்கு மக்களின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கி இருக்கிறது. இதனால் பல வருடங்களாக செல்வாக்குடன் இருக்கும் கட்சிகள் பதட்டத்தில் இருக்கிறது.
அதேபோல் ஆளும் கட்சி சில நெருக்கடிகள் கொடுக்கும் எனவும் சோசியல் மீடியாவில் ஒரு பேச்சு இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தேவையான வேலைகளை செய்து இருக்கிறார்.
அது மட்டும் இன்றி அடுத்த கட்டமாக நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவும் ப்ளான் செய்துள்ளார். அதேபோல் சிறு சிறு ஊர்களில் பொதுக்கூட்டம் போட்டு ஓட்டு சேகரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.
மேலும் ஜனவரி மாதத்தில் மற்றொரு மாநாடு நடக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது தமிழகத்தையே அதிரவைத்து தேசிய மீடியாக்களின் கவனம் பெறும் என்ற ஒரு தகவலும் கசிந்து உள்ளது.