சிம்பு, வெற்றிமாறன் படம் கூடிய விரைவில் ஆரம்பிக்கப் போகிறார்கள். இதுதான் சிம்பு ரசிகர்களுக்கு தற்போது கிடைத்த குட் நியூஸ். இந்தப் படம் 130 கோடி பட்ஜெட் என்றெல்லாம் ஆரம்பத்தில் புதிர் போட்டு இதற்கு பல தடைகளை போட்டு வந்தனர். ஆனால் இதற்கு தற்சமயம் பச்சைக் கொடி கிடைத்துள்ளது.
இந்தப் பெரிய பட்ஜெட் படம் பண்ணுவதற்கு பல தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை. அதனால் சிம்பு சில நாட்களாக மனக்குழப்பத்தில் இருந்தார். துபாய் சென்று பல தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிலதிபர் மற்றும் விநியோகஸ்தர் கண்ணன் ரவி என்பவரை துபாயில் சந்தித்து பேசி உள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் இந்த படத்தை சித்தாரா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிக்க முன்வந்தனர். அதனால் வெற்றிமாறனிடம் பேசிய சிம்பு அவரை அந்த தயாரிப்பாளர் பக்கம் கொண்டு செல்ல முற்பட்டார். ஆனால் வெற்றி பெருந்தன்மையாக நடந்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே வெற்றிமாறன் மற்றும் கலைப்புலி எஸ் தானு கூட்டணியில் உருவாகவிருந்த படம் வாடிவாசல். இந்த படத்திற்காக தாணுவிடம், வெற்றிமாறன் அட்வான்ஸ் ஆக க 10 கோடி வரை வாங்கியுள்ளார். இதனால் அவரை ஏமாற்றக்கூடாது, படம் பண்ணினால் அவருக்குத்தான் முதலில் பண்ண வேண்டும் என நினைத்து விட்டார்.
அது மட்டும் இல்லாமல் கலைப்புலி எஸ் எஸ் தானு கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்து உதவுபவர். நல்ல மனிதர், அவருக்கு தான் படம் பண்ண வேண்டும் என சிம்புவை சமாதானம் செய்துள்ளார். இப்பொழுது சித்தாரா என்டர்டைன்மென்ட்டை ஒதுக்கிட்டு, பழையபடி குறைந்த பட்ஜெட்டில் தாணுவிற்கே படம் பண்ண போகிறார்கள்.