Cinema : சினிமா என்பது நடிகர்களின் போதை. மரணம் வரைக்கும் சென்று பிடியில் இருந்து தப்பி மீண்டும் சினிமாவில் சிறுத்தை போல் தற்போது சினிமாவில் கலக்கி வரும் நடிகர்கள் 5 பேரை பற்றி தற்போது பார்ப்போம்.
கமல்ஹாசன் :
கமல்ஹாசன் தற்போது சினிமாவில் உச்ச நிலையை தொட்ட நடிகர். உலகநாயகன் பட்டத்தை பெற்றுவிட்டு சினிமாவையே கலக்கி வருகிறார். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு படப்பிடிப்பின் போது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.
ஆனால் உடனடியாக சிகிச்சை செய்யப்பட்டு மீண்டார். அதன் பின் விஸ்வரூபம், விக்ரம் போன்ற திரைப்படங்களில் புது அவதாரத்தை எடுத்தார். அந்த சமயம் இந்த செய்தி சினிமாவையே புரட்டி போட்டது.
விக்ரம் :
பிதாமகன் திரைப்படத்தில் சியான் என்று ஆரம்பித்து தனக்கான இடத்தை தக்க வைத்தவர் விக்ரம். சினிமாவின் ஆரம்ப காலத்தில், விக்ரமுக்கு விபத்து ஏற்பட்டது. அதன் பின் சூறாவளி போல் எழுந்து பல திரைப்படங்களில் ஹிட் கொடுத்தார்.
அஜித் :
சினிமாவை மட்டும் தன் கனவாக எடுத்துக் கொள்ளாமல் கார் ரேஸிங்கிள் கவனம் செலுத்தும் அஜித் ஒருமுறை பைக் மற்றும் கார் ரேசிங்கின் போது பயங்கரமான விபத்து ஏற்பட்டது. 1999 இல் தொடங்கி 2004-ம் வரையிலும் பல விபத்துக்களை சந்தித்து, அதன் பின் பல வருடங்களுக்குப் பிறகு, வேதாளம், விவேகம் வலிமை போன்ற திரைப்படங்களில் தனது முத்திரையை பதித்தார்.
அரவிந்த் சாமி :
ஒரு காலத்தில் பெண்களின் மனதை கொள்ளை அடித்தவர் அரவிந்த்சாமி. சில காலங்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் பரவி வந்தது. சில வருடங்கள் கழித்து “தனி ஒருவன்” திரைப்படத்தில் மீண்டும் ஹிட் கொடுத்தார்.
சிவராஜ் குமார் :
கன்னட நடிகரான சிவராஜ் குமார் தற்போது படுத்த படுக்கையாக இருந்து, மரணத்தின் பிடியில் இருந்து தப்பி சிவராஜ் குமார் மீண்டும் நடிகர் ரஜினியுடன் இணைந்துள்ளார். கன்னட மொழியில் மட்டுமில்லாமல் தற்போது தமிழ் மக்களிடம் புலமை வாய்ந்தவர்.