சங்கர் சில ஆண்டுகளாகவே வேள்பாரி நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார். இப்பொழுது அதற்கு உண்டான வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். சமீப காலமாக சங்கர் மீது எந்த ஒரு தயாரிப்பாளர்களுக்கும் பெரிய அபிப்ராயம் இல்லை.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் படத்திற்குப் பிறகு இவர் சொல்லிக் கொள்ளும்படி எந்த ஹிட் படங்களும் கொடுக்கவில்லை. எந்திரன் 2, இந்தியன் 2, கேம் சேஞ்சர் என எல்லா படங்களும் தொடர் தோல்வி. இந்த தோல்விகள் ஏகப்பட்ட விமர்சனங்களை சங்கர் மீது வைத்தது.
எல்லாமே பெரிய ஹீரோக்களை வைத்து எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள். இதனால் அனைவரது நம்பிக்கையும் இழந்தார் ஷங்கர். இப்பொழுது அவர் கையில் எந்த படங்களும் இல்லை. இதனால் அவர் கனவு படமான வேள்பாரியை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு பட்ஜெட்டாக 1000 கோடிகள் தேவைப்படுகிறது.
சங்கரின் முந்தைய படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அவரை நம்பி எந்த ஒரு தயாரிப்பாளரும் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்க முன்வரவில்லை. இதனால் வெளிநாட்டு தயாரிப்பாளர்களை ரெடி பண்ணியுள்ளார். தனக்கு தெரிந்த நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து அவருக்கு தயாரிப்பதற்கு தொகை கிடைக்கப் போகிறது,
ரஜினி மற்றும் கமல் இதுவரையும் தான் அந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக சங்கர் திட்டமிட்டுள்ளார். இவர்கள் நடித்தால் தான் 1000 கோடிகள் லாபத்தை பெற முடியும் என்ற எண்ணமும் அவரிடம் இருக்கிறது. ஆனால் கமல் இதற்கு ஒத்துக்கிட்டாலும் ரஜினி மறுப்பார் என தெரிகிறது.
ஏற்கனவே எந்திரன் 2 படபிடிப்பின் போது ஷங்கர் மற்றும் ரஜினிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ரஜினியை படாதபாடு படுத்தி உள்ளார் ஷங்கர். சில அவமரியாதை நிகழ்வுகளும் ரஜினிக்கு நடந்துள்ளது. இதனால் சூட்டிங் முடிந்தவுடன் இனிமேல் சங்கர் படத்தில் நடிக்க மாட்டேன் என வெளிப்படையாக கூறியுள்ளார் ரஜினி.