Marumagal : சன் டிவி தொலைக்காட்சியில் இல்லத்தரசிகள் அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று மருமகள். சற்று மாறுதலான திருப்பங்களுடன் இல்லாமல் ஒரே கருத்தில் தற்போது கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
சத்யாவின் அடங்காத கோபம்..
ஏசி வாங்கியே ஆக வேண்டும் என்ற சத்யாவின் அடத்தால், கார்த்தி EMI- யில் ஏசி வாங்குகிறான். இரவு நேரம் என்பதால் வாங்கிய ஏசியை மாற்ற முடியாமல் போகிறது. கார்த்தி வருகிறான் ஆதிரையை பார்த்து, எதுக்கு யோசனை? இன்னைக்கு ஏசி மாற்ற முடியுமா என்று தெரியவில்லை என்கிறாள் ஆதிரை.
இதுல என்ன இருக்கிறது நான் சத்யாவிடம் பேசுகிறேன் என்று, வீட்டுக்குள்ளே செல்கிறான் கார்த்தி. கதவைத் தட்டி பார்த்து சிறிது நேரம் கழித்து தான், கதவைத் திறந்து என்ன என்று அதட்டலாக கேட்கிறாள் சத்யா.
ஏசி என்ற வாயைத் திறந்ததும் என்ன “ஏசி வாங்கவில்லையா என்று அதட்டுகிறாள் சத்யா“. என்ன ஆதிரை உங்களை நம்பி தான் இருந்தேன் என்று கேட்கிறார் உடனே கார்த்தி என்ன சொல்ல வருகிறான் என்று கேள் என்கிறால் ஆதிரை. ஏசி வாங்கியாச்சு ஆனால் அதை தற்போது மாற்ற முடியாது எனக் கூறுகிறான் கார்த்தி. ஓ EMI- யில் ஏசி வாங்கியாச்சா என்று நக்கலுடன் கேட்கிறாள்.
எனக்கு இன்னைக்கு ஏசி மாட்டி ஆக வேண்டும் என்று, கோபத்துடன் உள்ளே போகிறான் சத்யா. இன்னொரு கட்டமாக இரவு நேரம் சாப்பிடும் பொழுது, உணவு நல்லா இல்லை என்று தட்டை எரிகிறாள் சத்யா. இதைப் பார்த்து கண்ணீர் கமலத்துடன் நிற்கிறாள் ஆதிரை.
இப்படி சாப்பிடும் உணவை கொட்டலாமா என்று பாட்டி கேள்வி கேட்கிறார் எவ்வளவு பேர் சாப்பாடு கூட இல்லாமல் இருக்கிறாங்க. இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா என்று கேட்கும்போது, எனக்கு நீங்க அட்வைஸ் பண்ணாதீங்க என்று மூஞ்சியில் அடித்த மாறி கூறுகிறாள் சத்யா. உடனே வயது வித்யாசம் பார்க்காமல் மன்னிச்சிடு மா என்று கூறுகிறார் பாட்டி