Marumagal : சன் டிவி தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் மருமகள். சத்யாவின் பேய் ஆட்டத்தால் கதி கலங்கும் குடும்பம் அடுத்து நிகழவிருக்கும் சம்பவங்களை பற்றி பார்ப்போம்.
சத்யாவின் அவசரத்தால் பிரபு, கார்த்தி மற்றும் சாமி இவர்கள் மூவரும் ஏசி மாற்றுவதில் களமிறங்குகின்றனர். முக்கியமாக பிரபு தான் அந்த ஏசியை மாட்ட முயற்சி செய்கிறான். முதலில் ஒரு ரூமில் மட்டும் கரண்ட்டை ஆஃப் செய்கிறாள் ஆதிரை.
விபரீதத்தில் முடிந்த விஷயம்..
ஏசியை மாட்டி முடித்தவுடன் லைட்டை ஆன் பண்ண சொல்கிறான் பிரபு. ஆனால் ஒட்டுமொத்தமாக கரண்ட் போய்விட்டது. பிரபு மற்றும் கார்த்திக் இருவரும் கதிக்கலங்கி என்னானது என்று தெரியாமல் நிற்கின்றனர்.
எல்லா ரூமிலும் கரன்ட் கட்டானதால் சத்யாவுக்கு மேலும் எரிச்சல் அதிகமாகிறது. ஆதிரை என்னாச்சுங்க என்று கேட்டுக்கொண்டு வருகிறாள். என்னங்க இப்படி மொத்த ரூம்லயும் கரண்ட் கட் ஆயிடுச்சி என்று கேட்கும் போது என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறான் பிரபு.
“என்ன அண்ணே இப்படி பண்ணிட்ட சத்யா இப்ப பேய் ஆட்டம் ஆடுவாள்” என்கிறான் கார்த்தி அந்தப் பேய் கூட்டிட்டு வந்ததே நீதானே என்று நக்கலாக பேசுகிறான் பிரபு. ஆதிரையிடம் எப்படியாவது சத்யாவிடம் பேசு என்கிறான் பிரபு. ஏற்கனவே என் மேல் அவள் கோபமாய் இருக்கிறாள். நான் பேசமாட்டேன் என்கிறாள் ஆதிரை.
குடும்பம் மொத்தமும் சத்யா என்ன ஆட்டம் போட போகிறாலோ என்று பதட்டத்துடன் இருக்கின்றனர். “ஏசி மாட்டுகிறேன் என்று சொல்லி இப்படி கரண்டையை கட் பண்ணி விட்டுட்டீங்களா?” என்று கத்தத்தொடங்குகிறாள் சத்யா.
வெளியில் கட்டல் போட்டு தருகிறேன் இன்னும் ஆறு மணி நேரத்தில் பொழுது விடிந்து விடும் என்று நக்கலாகவே பேசுகிறான் பிரபு. எல்லாரும் சேர்ந்து என்னை பழி வாங்குகிறீர்களா என்று கேட்கிறான் சத்யா. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அடுத்த எபிசோடில் பார்ப்போம்.