மருமகள் : சன் டிவி தொலைக்காட்சியில் இல்லத்தரசிகள் தினந்தோறும் விடாமல் பார்க்கும் சீரியல் மருமகள். தற்போது சத்யா செய்யும் பிரச்சினையை தான் வீட்டில் பூகம்பமாக வெடித்து வருகிறது. சத்யா வீட்டில் செய்யும் பிரச்சனையை எப்படி தடுக்க போகிறாள் ஆதிரை.
நான் ஏசி இல்லாமல் தூங்க மாட்டேன் என்று பிரச்சனை செய்த சத்யாவிற்கு, பிரபு முற்றுப்புள்ளி வைப்பார் என்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆதிரையை தனியாக கூப்பிட்டு நம்ம ரோகினி ரூமில் தங்கிக் கொள்ளலாம் என்று கூறினார் பிரபு.
பின்பு சத்யா, பிரபு ஆதிரை ரூமில் உள்ளே சென்றாள். தண்ணி, பாயை எடுத்துக் கொள்கிறேன் என்று எடுத்துவிட்டு வரும்போது எனக்கெல்லாம் தண்ணி வேண்டாமா என்று நக்கலாக பேசுகிறாள் சத்யா. ஆதிரை பாயை எடுத்து விட்டு வெளியே வரும்போது பாட்டியும் பிரபுவின் அப்பாவும் ஆச்சரியத்துடன் ஆதிரையை கேட்கின்றனர். ” என் பையன் பிரபு இப்படி பேசிட்டு போறான்” என்று பிரபுவின் கோபமில்லா பேச்சை ஆச்சரியத்துடன் கேட்டனர்.
சத்யா செய்யும் இந்த பிரச்சினைகளை பார்த்து கார்த்திக் கோபத்துடன் இருக்கிறான். இன்னொரு பக்கம் சத்தியா தனது அண்ணாவிற்கு ஃபோன் பண்ணி நடந்ததை எல்லாம் கூறுகிறாள். நான் வருகிறேன் என்று அடம் பிடிக்கிறார் சத்யாவின் அண்ணன்.
ஆதிரையும் பிரபுவும் நிலவைப் பார்த்து படுத்துக் கொண்டிருக்கின்றனர். நிலா எவ்வளவு அழகா இருக்கிறது என்று பிரபு சொல்லுகிறார் அவரை பார்த்து ஆதிரை ஆமாம் “நீங்க நிலாவை ரசிக்கிறீங்க நான் உங்களை ரசிக்கிறேன்” என்று சந்தோஷமாக பேசிக்கொண்டே இருக்கிறாள் ஆதிரை.
பின்பு விடிந்ததும் ஆதிரையிடம் பிரபு பேச வருகிறான். ஏங்க நம்ம ஒரு ஏசி வாங்கலாம் என்று கூறுகிறாள் ஆதிரை. அதெல்லாம் வேண்டாம் சத்யாவை கல்யாணம் பண்ணினது கார்த்தி தானே. அவன் உழைத்து AC வாங்கி தரட்டும் என்று பிரபு கூறுகிறான். இவர்கிட்ட என்ன பேசினாலும் நடக்காது என்று நினைத்து விட்டு ஆமாங்க நான் கார்த்திகேயன் வாங்க சொல்லிடுறேன் சொல்கிறான் ஆதிரை.
சத்யா திடீரென பிரபுவின் தங்கையை கை நீட்டி அடித்து விடுகிறாள். அதை உடனே தட்டிக் கேட்கிறான் பிரபு. தற்போது தான் கதை சூடு பிடிக்கிறது. அடுத்தது என்ன நிகழப்போகிறது என்று அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.