Marumagal : சன் டிவி தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்புடன் நகரும் சீரியலில் ஒன்று மருமகள். தற்போது எது நடந்தாலும் பொறுத்துக் கொண்டிருக்கும் ஆதிரை. அதற்கு ஏத்த மாதிரி குடும்பத்தில் இருக்கும் நபர்களும் நடந்து கொள்கிறார்கள். சத்யா செய்யும் அலப்பறை என்ன?
இதல்லாம் ஓவர்..
ஏசி இருந்தால் தான் தூங்குவேன் என்று சத்யாவின் கட்டளையால் ஒட்டு மொத்த குடும்பமே வலையில் சிக்கித் தவிக்கிறது. இது மட்டும் இல்லாமல் கார்த்தி சத்யாவை இஷ்டம் இல்லாமல் திருமணம் செய்ததால் இனி என்ன நடக்கப் போகிறது என்பதும் பிரபுவின் கையில் தான் இருக்கிறது.
கார்த்தி சத்யாவின் திருமணம் காதல் திருமணம் என நினைத்துக் கொண்டிருந்த பிரபுவிற்கு இது சதியால் ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை என்று தெரிந்த பிறகு, தற்போது லெப்ட் ஹேன்டில் டீல் பண்ணி வருகிறான். ஆதிரை ஏசி வாங்கப் போகும் பொழுது கார்த்தி அதை தடுத்து நிறுத்தும் வகையில் பேசினான்.
நான் செய்தது தான் தப்பு. அதனால்தான் சத்யாவால் இப்படி குடும்பத்திற்கு பிரச்சினை வருகிறது என்ற கார்த்திக் சோகத்தில் கூறுகிறான். AC ஆர்டர் போட்டு தான் ஆக வேண்டும் என்று சத்யா மாதிரி ஆதிரை இடம் கட்டளையிடுகிறாள். இதெல்லாம் பொறுத்துக் கொண்டு ஏசியை வாங்குகிறாள் ஆதிரை.
ஆனால் ஏசி இரவு நேரத்தில் தான் டெலிவரி செய்கிறார்கள். நேரம் ஆகிவிட்டது ஏசி மாட்ட முடியாது என்று சென்று விட்டனர். பிரபு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறான். வீட்டின் வெளியில் ஏசி பெட்டியை வைத்தது பார்த்து. இனி பிரச்சனையே இல்லை என்று கூறுகிறான்.
ஐயோ இல்லைங்க ஏசி மாட்ட முடியவில்லை என்று ஆதிரை சொல்லுகிறாள். இனிய சத்யாவால் என்ன நடக்கப் போகிறதோ என்று பயத்தில் ஆதிரை இருக்கிறாள். சத்யா அடுத்து செய்யும் பிரச்சினையை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் மாதிரி. பிரபு இதை பார்த்துவிட்டு சும்மா இருப்பானா? இதை நோக்கி தான் அடுத்த கட்ட எபிசோடு நகரப் போகிறது.