Cinema : இப்போது சினிமாவில் சிறிய படங்களை விட பெரிய படங்களுக்கு தான் அதிக மதிப்பு கிடைக்கிறது. அதுவும் அந்த திரைப்படங்கள் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. ஹீரோயின்களுக்கு கூட மதிப்பு குறைந்து விடுகிறது. ஆனால் ஹீரோக்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.
2025-இல் மலேசியாவில் தமிழ் படம் ஒன்றுக்கு அங்குள்ள மக்கள் எவ்வளவு பெரிய ஆதரவு தருகிறார்கள் என்பதற்கு இவை நிரூபணம்தான். இதோ ஆண்டின் அதிரடியான 5 தமிழ் படங்களின் ஓப்பனிங் பட்டியல்:
குட் பேட் அக்லி..
விடாமுயற்சி பட தோல்விக்கு பிறகு, புது முக இயக்குனரான ஆதிக் ரவிசந்திரனை நம்பி தல அஜித் நடித்த படம் குட் பேட் அக்லி. ரசிகர்களின் ஆழ்மனதில் பதிந்த படம் என்று சொல்லலாம். தற்போது இந்த திரைப்படம் அமெரிக்கா முழுவதிலும் திரையிடப்படவுள்ளது.
விடாமுயற்சி :
த்ரிஷா மற்றும் அஜித்தின் காம்போவில் வெளியான இத்திரைப்படம் தமிழ்நாட்டில் அந்த அளவுக்கு வரவேற்பு இல்லை. சமூக வலைத்தளங்களில் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தது தான் மிச்சம். ஆனால் முதல் வார வசூல் கலைகட்டியது. இத்திரைப்படம் அமெரிக்கா முழுவதும் இன்று ரிலீஸ் செய்யவுள்ளது.
ரெட்ரோ..
ரசிகர்களின் மத்தியில் மிக எதிர்பார்ப்பை உருவாக்கி வெளியான திரைப்படம் ரெட்ரோ. சூர்யா பூஜா ஹெக்டே ஜோடி திரையில் பெரிதளவு வரவேற்பை கொடுத்தது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் ₹250 கோடி வசூல் பார்த்தது. தற்போது இந்த படமும் அமெரிக்காவில் இன்று திரையிடப்படவுள்ளது.
தக் லைப்..
மணிரத்னம் இயக்கிய படம் என்பதால் மக்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் திரையில் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் காலி செய்தது தக் லைப் திரைப்படம். இந்தப் படம் இன்று அமெரிக்காவில் இருக்கும் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்படவுள்ளது.
தலைவன் தலைவி..
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. திரையில் படத்தை பார்த்தவுடன் ரசிகர்களுக்கு பிடித்து போய் விட்டது. இந்தத் திரைப்படமும் அமெரிக்கா முழுவதும் வெளியிடப்படும் திரைப்படங்களில் ஒன்று.