Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், கார்த்திகாவுக்கு நல்லபடியாக விருந்து முடிந்த நிலையில் சேரன் மனதில் இருந்த பாரம் குறைந்துவிட்டது என்பதற்கு ஏற்ப ரிலாக்ஸ் ஆகிவிட்டார். அந்த வகையில் கார்த்திகாவின் ட்ராக்கும் இனி அவ்வளவுதான் என்பதற்கு ஏற்ப புருஷன் வீட்டுக்கு போகிறேன் என்று கிளம்பி போய்விட்டார்.
போகும்பொழுது நிலாவிடம் என் மாமாவை நன்றாக பார்த்துக் கொள். கூடிய சீக்கிரத்தில் என் மாமாவுக்கு கல்யாணத்தை பண்ணி வைத்து விடு என்று சொல்லுகிறார். அதன்படி சேரனுக்கு ஜோடியாக வடநாட்டுக்காரி வரப்போகிறார். இவருடைய கதாபாத்திரம் நெகட்டிவ்வாக இருக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
அடுத்ததாக நிலா, தனக்கு வேலை எப்படியும் கிடைத்து விடும் என்ற சந்தோஷத்தில் சோழனை கூட்டிட்டு ஆபீஸ்க்கு போகிறார். ஆனால் அங்கே போன பிறகு தான் தெரியுது அது வாசுதேவனின் கம்பெனி என்று. இதெல்லாம் வாசுதேவனின் சூழ்ச்சி என்று புரிந்து கொண்ட நிலா, எனக்கு இந்த வேலையை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு போகப் போகிறார்.
அடுத்ததாக சோழனுக்கு ஒரு சவாரி வந்திருக்கிறது என்று போன நிலையில் அங்கே வந்திருப்பது நிலாவின் அப்பா. உடனே மாமனாரை கூட்டிட்டு அந்த காரில் ஏற்றி வரும் பொழுது மாமனாரை பார்த்து எப்படி இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு அவர், நீ ஒரு டிரைவர் உனக்கு இந்த மனோகரின் மகள் கேட்கிறதா என்று கோபமாக திட்டுகிறார்.
உடனே சோழன், நிலா உங்க வீட்டில் இருந்ததை விட எங்களுடைய வீட்டிற்கு வந்த பிறகு தான் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார். இதைக் கேட்டதும் கோபப்பட்ட மனோகர், நிலா என்னுடைய மகள் கூடிய சீக்கிரத்திலேயே உன்னை தூக்கி எறிந்து விட்டு என்னுடைய மகளாக என் கூட வருவாள் என்று சவால் விடுகிறார். உடனே சோழன் இனிமேல் நிலா உங்களுடைய பொண்ணு கிடையாது.
இந்தச் சோழனின் மனைவி என்று கெத்தாக சொல்கிறார். ஆனால் மனோகர் போதும் நிறுத்துடா என்று சொல்லி இன்னும் ஒரு வாரத்திலேயே நிலா என்னுடைய மகளாக என் வீட்டிற்கு திரும்ப வந்து விடுவாள் என்று சவால் விடுகிறார். உடனே சோழனும் பார்க்கலாம் என்று சவால் விடுகிறார்.
அதனால் ஏதாவது சூழ்ச்சி பண்ணி நிலாவை சோழன் வீட்டில் இருந்து பிரித்து கூட்டிப் போவதற்கு வாசுதேவன் மற்றும் மனோகர் பிளான் பண்ணப் போகிறார்கள். ஆனால் நிலா, சோழன் குடும்பத்தை விட்டு பிரிந்து போக வாய்ப்பு இல்லை, அதனால் நிலா இதே குடும்பத்தில் சந்தோஷமாக வாழ முடிவு எடுக்கப் போகிறார்.