Vadivelu : வடிவேலுக்கு ரெட் கார்ட் தடை காலம் முடிவுக்குப் பிறகு வெளியான படங்கள் எதுவும் பெரிதாகப் போகவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படம் மட்டும் அவருக்கு கை கொடுத்தது. அதன் பிறகு சமீபத்தில் மீண்டும் பகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் ஓரளவு விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. இந்நிலையில் வடிவேலுவை தூக்கி விடுவதற்காக இயக்குனர் ஒருவர் இறங்கி இருக்கிறார். அதாவது வெற்றிமாறன் தற்போது சிம்புவை வைத்து படம் எடுத்து வருகிறார். அடுத்ததாக வடசென்னை 2 படமும் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் வடிவேலு குறித்து பேசியிருந்தார். அதாவது தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு ஒரு அற்புதமான நடிகர் என்றால் தன்னை பொருத்தவரையில் அது வடிவேலு மட்டும் தான். அவருக்கு படிப்பு மற்றும் சினிமா பின்புலம் கிடையாது.
முதல் முறையாக வடிவேலு உடன் இணையும் இயக்குனர்
ஆனால் படங்களில் கதாபாத்திரங்களாகவே வாழ்வார். சாதாரண காமெடி நடிகர் மட்டும் கிடையாது, கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர்தான் வடிவேலு என்று கூறியிருக்கிறார். மேலும் வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.
இந்த படம் சூரியை வேறு ஒரு பரிமாணத்தில் ரசிகர்களுக்கு காட்டியது. அதன் பிறகு அடுத்தடுத்து கதாநாயகனாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடித்த மாமன் படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அதேபோல் வடிவேலுவுக்கும் தரமான ஒரு கதையை வெற்றிமாறன் தயார் செய்து வருகிறாராம். கண்டிப்பாக வடிவேலுவின் சினிமா கேரியரையே புரட்டிப்போடும் படமாக அந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.