Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் அரசின் இக்கட்டான சூழ்நிலைக்கு ஒரு நியாயம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஜாமினில் வெளியே வந்த குமரவேல் மீது புகார் கொடுத்து நிரந்தரமாக ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று மும்மரமாக இருக்கிறார். இதனால் கோர்ட்டுக்கு போயாவது குமரவேலக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டும் என்ற அரசியை கூட்டிட்டு போக தயாராகி விட்டார்.
இதனால் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பதட்டமாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் குமரவேலுவை நினைத்து மாரி வேதனைப்பட்டு கண்ணீர் விடுகிறார். என் பையன் நிரந்தரமாக ஜெயிலுக்கு போய் விடுவானோ, கோர்ட்டு கேஸ் என்று நாங்கள் அலையணுமோ என்று அப்பத்தாவிடம் பீல் பண்ணி பேசுகிறார். அவங்க குமரவேலு மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கி விட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று சொல்கிறார்.
உடனே அப்பத்தா, யாருக்கும் தெரியாமல் பாண்டியனுக்காக காத்துக் கொண்டிருந்து பாண்டியன் வரும்பொழுது குமரவேலு கேசை அப்படியே விட்டு விடுங்கள் என கெஞ்சுகிறார். ஆனால் பாண்டியன், என் மகளை இந்த நிலைமையில் பார்க்க என்னால் முடியவில்லை. எவ்வளவு சந்தோசமாக கவலை இல்லாமல் இருந்த என் மகள் தற்போது யாரிடமும் பேசாமல் முகம் வாடி போய் இருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை.
அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் குமரவேலு செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். அதனால் இந்த விஷயத்தில் உங்களுக்கு என்னால் உதவி பண்ண முடியாது என்று பாண்டியன் சொல்கிறார். அந்த வகையில் வீட்டுக்கு வந்து அரசியை கூட்டிட்டு போவதற்கு பாண்டியன் தயாராகிவிட்டார். இருந்தாலும் மாமியார் சொன்னதுக்காக கோர்ட்டுக்கு போய் குமரவேலு மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதற்கிடையில் செந்தில் முதல் மாசம் சம்பளம் வாங்க போகிறதே எண்ணி சந்தோசமாக இருக்கிறார். என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்று பெரிய லிஸ்ட் போட ஆரம்பித்து விட்டார். மீனாவிடம் உனக்கு என்ன வேணும் என்று கேட்டுக் கொண்டார். இப்படி ஓவராக துள்ளிவரும் செந்தில், ஆசை நிராசையாக போக போகிறது என்பதற்கு ஏற்ப முதல் மாசம் சம்பளம் வாங்காமலேயே வேலை பறிபோகப் போகிறது. லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியதால் செந்திலுக்கு இந்த வேலை நிரந்தரம் இல்லாமல் ஆகப்போகிறது.