தென்னிந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படங்களில் ஒன்று கார்த்தியின் அடுத்த படமான “மார்ஷல்”. ஏற்கனவே படத்தின் முதல் அறிவிப்பு வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போது வந்திருக்கும் புதிய அப்டேட் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது.
மார்ஷல் படத்தில் கார்த்திக்கு நேரடி எதிரியாக வில்லன் கதாபாத்திரத்தில் ஆதி பினி ஷெட்டி நடிக்க உள்ளார். ஆதி இதற்கு முன்பே பல வெற்றி படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களிடம் வித்தியாசமான கேரக்டர்களை செய்து பாராட்டை பெற்றவர்.
ஆனால் ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தை நிவின் பாலி தான் செய்ய இருந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி தனது பிஸியான பட அட்டவணை காரணமாக தேதி பிரச்சினை ஏற்பட்டதால் திட்டத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு மாற்று தேர்வாக ஆதி பினி ஷெட்டியை இணைத்துள்ளது.
மேலும் மார்ஷல் படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என்பது மற்றொரு சுவாரஸ்யமான தகவல். கார்த்தியின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் ஒரு மெகா ஆக்ஷன் படமாக வெளிவரும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சினிமா வட்டாரங்களின் கூற்றுப்படி இப்படம் பான் இந்தியா ரிலீஸாக திட்டமிடப்பட்டுள்ளது.
கார்த்தியின் கடந்த சில படங்கள் “சுல்தான்”, “விருமன்”, “ஜப்பான்” போன்றவை கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இந்த முறை அவர் தனது career-க்கு ஒரு மாஸிவ் கம்பேக் கொடுக்க உள்ளார்.
இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், தொழில்துறை வட்டாரங்களும் “மார்ஷல்” எப்படி அமையும் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.