Dhanush : தனுஷ் நேற்றைய தினம் தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அவருக்கு இந்த வருடம் பொன்னான வருடமாக தான் அமைந்தது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான குபேரா படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இதைத்தொடர்ந்து நித்யா மேனன் உடன் அவர் நடித்திருக்கும் இட்லி கடை படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் நேற்று பல பிரபலங்கள் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருந்தனர். அதுவும் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்ந்து தெரிவித்தனர்.
மற்றொருபுறம் போயஸ் கார்டனில் உள்ள தனுஷின் வீட்டின் முன் அவரது ரசிகர்கள் குவிந்தனர். தனுஷ் வெளியே வந்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு நடிகைக்கு மட்டும் தனது நன்றியை தெரிவித்து இருப்பது சர்ச்சையாக இருக்கிறது.
நடிகையின் பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி சொன்ன தனுஷ்

அதாவது ஹிந்தியில் தற்போது தனுஷ் Tere Ishq Mein என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் க்ரித்தி சனோன். குபேரா வெற்றியை தொடர்ந்து தனுஷ் இரவு பாட்டி வைத்திருந்தார். அதில் பல நடிகைகள் கலந்து கொண்டனர்.
அதில் க்ரித்தி சனோன் கலந்து கொண்டது கிசுகிசுக்கப்பட்டது. இப்போது பல பிரபலங்கள் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்தாலும் அவருடைய பதிவை மட்டும் போட்டு நன்றி தெரிவித்திருப்பது தான் சர்ச்சையாகி இருக்கிறது.
ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் நன்றி சொல்லாமல் நடிகையை மட்டும் தனியாக குறிப்பிட்டு நன்றி சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் அவர்களுக்குள் நெருங்கிய நட்பு இருக்கிறதா என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.