Phoenix review: மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் படம் கிட்டத்தட்ட ரிலீஸ் செய்ய ஒரு வருடம் பாடுபட்டு இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. உங்களுக்கு நாங்கள் ஜெயிக்கிறது பிரச்சனையா, இல்ல உங்கள ஜெயிக்கிறது பிரச்சனையா இதுதான் படத்தின் மையக்கரு.
சூர்யா சேதுபதிக்கு தோள் கொடுக்கும் விதமாக இந்த படத்தில் தேவதர்ஷினி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் பிளஸ் மற்றும் மைனஸ் பற்றி பார்க்கலாம்.
முழு விமர்சனம்
படத்தின் ஆரம்பத்திலேயே ஹீரோ சூர்யா சேதுபதி ஒரு எம்எல்ஏ வை கொலை செய்து விட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படுகிறார். அங்கு சில கைதிகளால் அவர் மீது கொலை முயற்சி நடக்கிறது. சூர்யா எதற்காக கொலை செய்தார், தற்போது அவரை பலி வாங்குபவர்கள் யார், அந்த சதியிலிருந்த அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் படம்.
படத்தின் ப்ளஸ்: அறிமுக ஹீரோ இப்படி ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் நடிப்பதற்கே ஒரு பெரிய மன தைரியம் வேண்டும். கச்சிதமான சண்டை காட்சிகளுக்கு முகபாவனைகளுடன் ஒத்துப் போகிறார் சூர்யா. எந்தவித பயமும் இல்லாமல் இருக்கும் அவரது நடிப்பு மற்றும் வசனம் கைதட்ட வைக்கிறது.
படம் முழுக்க ஹீரோவுக்கு கொடுக்கும் பில்ட் அப் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. படத்தின் மிகப்பெரிய தூண்கள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் தேவதர்ஷினி. படத்தின் சண்டைக் காட்சிகளை பார்க்கும் பொழுது அர்ஜுன், சரத்குமார் எல்லாம் ஹீரோவாக நடித்த படங்கள் தான் கண் முன் வருகிறது.
படத்தின் மைனஸ்: படத்தின் இயக்குனர் சண்டை மாஸ்டர் அனல் அரசு என்பதால் தான் என்னவோ படத்திற்கு ஆக்சன் இருந்தால் மட்டும் போதும் என நினைத்து விட்டார் போல. தியேட்டரில் உட்கார்ந்து பார்ப்பவர்கள் கொஞ்சம் சிரிப்பதற்கு ஏற்ற மாதிரி என்டர்டெயின்மென்ட் இருந்திருக்கலாம்.
சூர்யாவுக்கு ஆக்சன் கிளாஸ் எடுத்துவிட்டு ஆக்டிங் கிளாஸ் எடுக்காமல் போனது அவர் நடிப்பிலேயே கச்சிதமாக தெரிகிறது. வழக்கமான பழிவாங்கும் கதை என்பதால் தியேட்டரில் உட்கார்ந்திருப்பவர்களே அடுத்தடுத்த என்ன காட்சிகள் வரும் என்பதை அசால்டாக சொல்லிவிடுகிறார்கள்.
ஹீரோவுக்கு கொடுக்கும் பின்னணி இசை மற்றும் பில்டப் வசனங்கள் என்னவோ நம் மக்கள் செல்வனின் வாரிசுக்கு வயது பத்தாததால் கொஞ்சம் ஓவராக தெரிகிறது.
சூர்யா சேதுபதி கிட்டத்தட்ட இந்த படத்திற்காக 60 கிலோ குறைத்ததில் இருந்தே சினிமா தான் இனி நம் வாழ்க்கை என அவர் முடிவு எடுத்திருப்பது தெரிகிறது.
அப்பா போல் மெதுவாக எட்டு எடுத்து வைக்காமல் எடுத்ததும் அதிரடி ஆக்சன் ஹீரோ என களம் இறங்கி இருக்கிறார். இவருக்கு மக்கள் என்ன தீர்ப்பளிக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
சினிமா பேட்டை ரேட்டிங் : 2.8/5