Gossip: அந்த நடிகர் நடிப்பின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தை எல்லாம் விட்டுவிட்டு வேற பிளானில் இறங்கி விட்டார். இதெல்லாம் அவருக்கு ஒர்க் அவுட் ஆகாது பழைய இடத்துக்கே போக வேண்டியதுதான் என தொடர்ந்து கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் நடிகர் ஏதோ ஒரு நம்பிக்கையில் அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவர் நினைத்தது போலவே தற்போது அவர் அரசியல் வட்டாரத்தில் இருக்கும் பெரும் புள்ளிகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்.
எப்படியாவது இவரை ஓரம் கட்ட வேண்டும் என ஒவ்வொருவரும் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் இவரை வைத்து இடத்தை பிடிக்க முக்கிய கட்சி திட்டமிட்டு இருக்கிறது.
முக்கிய கட்சியிடம் இருந்து வந்த அழைப்பு
தலைமை சரியாக இல்லாத நிலையில் இந்த கட்சி ஆட்டம் கண்டுள்ளது. அதேபோல் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கும் குறைந்து விட்டது. அதை எல்லாம் மீட்டெடுக்க நடிகரை தங்கள் பக்கம் இழுப்பதற்கு அவர்கள் தயாராகி விட்டனர்.
ஆனால் நடிகர் கழுவுற மீனில் நழுவுற மீனாக இருக்கிறார். எதற்குமே பிடி கொடுக்கவில்லை. தற்போது வந்த அழைப்பை கூட அவர் கண்டுக்காமல் விட்டுவிட்டாராம். இதற்கு காரணம் மக்களின் ஆதரவை பெறவேண்டும் என்பதுதான்.
அதற்கான காய்களை நகர்த்தி வரும் நடிகர் வேறு சில பிளான் வைத்திருப்பதாக கூறுகின்றனர். நிச்சயம் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.