Vijay : விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை ஆரம்பித்த போது யாருக்கும் இவரது கொள்கைகள் புரியவில்லை. விஜய்யும் கட்சி ஆரம்பித்தபோது மீடியாவை பார்த்தும் பேசவில்லை ஆகையால் அனைவருமே ஒரு குழப்பத்தில் இருந்தார்கள்.
ஆனால் விஜய் தனது முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் நடத்தி தனது பேச்சாற்றல் மூலம் அனைவரையும் வியந்து பார்க்க வைத்தார். ஓரளவிற்கு இந்த மனதிற்கு பிறகு விஜய் அவர்களுக்கு முன்பை விட செல்வாக்கு உயர்ந்துதான் உள்ளது.
இப்போது விஜய் ஆதரவாளர்களும், விஜய் தொண்டர்களும் அதிகமாவே உள்ளனர். இதனால் பழைய அரசியல் காட்சிகள் அனைவருக்குமே ஒருபக்கம் பயம் வந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் விஜய் தனது அடுத்தடுத்த அடிகளை நிதானத்துடன் வைத்தது மேலும் பயத்தை கிளப்பிவிட்டது.
முடிஞ்சா மதுரை மாநாட்டை தடுத்து பார்??
தற்போது விஜய் நடத்தப்போகும் மதுரை மாநாட்டிற்கு பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், நிறைய எதிர்ப்புகளும் எழுந்துவருகின்றன. எப்படியாவது இந்த மாநாட்டை நடத்தவிட கூடாது என்ற எண்ணத்தோடு சில கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. தற்போது நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் நமக்கே தெரியும்.
இவர்கள் இவ்வாறு மாநாட்டை தடுக்க செய்யும் வேலைகளை பார்த்து நமக்கே கோபம் வருகிறது. இந்த நிலையில் ஒருவர் நேரிடையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார். அது வேற யாரும் இல்லை நம் நகைச்சுவை நாயகன் செந்தில்தான்.
இவர் தற்போது அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் மாநாட்டை தடுக்க சதி செய்கிறார்கள். முடிஞ்சா மாநாட்டை தடுத்து பார்?? என மிகுந்த கோபத்துடன் கூறியுள்ளாராம், அதும் அந்த பெரியக்கட்சியை மறைமுகமாக எச்சரித்துள்ளாராம். இவ்வாறு விஜய்க்கு ஆதரவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.