Surya : நடிகர் சூர்யா அவர்கள் தமிழ் திரையுலகத்தில் எந்த போட்டியில் இன்றி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். சூர்யா அவர்களுக்கு அதிக ஆண்கள் ரசிகர்கள் இருப்பார்களோ என்னவோ, ஆனால் அதிக பெண் ரசிகர்கள் கொண்ட நடிகராக சூர்யா அவர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் தற்போது நடித்து வெளிவரவிற்கும் “கருப்பு” படத்தின் அப்டேட் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. தற்போது இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று அரசியல் பற்றி ஒரு சில சுவாரசியமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதாவது அரசியல் பற்றி என்ன அரசியல்வாதி பற்றி.
மதில் மேல் பூனை போல தவிக்கும் சூர்யா..
இவர் இந்த நிகழ்ச்சிகள் கூறியிருப்பதாவது நான் கல்லூரியில் படிக்கும்போது என்னுடைய ஜூனியர் நான் அவரை செல்லமாக பாஸ் என்று தான் கூப்பிடுவேன். என்னை வைத்து இரண்டு படம் எடுத்தவர், தற்போது அவர் “deputy CM” பதவியில் உள்ளார் இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் அவர்களை குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் எப்பவும் எல்லோரும் அணுகும் முறையில் இருப்பார். பெரிய அளவில் பந்தா, பகட்டுத்தனம் இல்லாமல் சாதாரண மனிதரை போல் இருப்பார் என உதயநிதியை பற்றி பெருமையாக பேசி உள்ளார் சூர்யா.
அதே மேடையில் இன்னொரு நண்பர் ஒருவர் இருக்கிறார், அவரும் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து பயணத்தை தொடர்ந்துள்ளார். அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும் என்று நடிகர் விஜய் அவர்களை பற்றியும் பேசியுள்ளார் நடிகர் சூர்யா.
இரண்டு நண்பர்களையும் ஒரே தராசு தட்டில் வைப்பதில் என்பது என்னவோ நல்ல விஷயம் தான். ஆனால், இருவருமே எதிரெதிர் துருவங்கள், இருவருமே வெவ்வேறு கட்சிகளை சார்ந்தவர். ஆனால் எப்போதுமே அரசியல் என்று வரும்போது நான் யாராவது ஒரு பக்கம் நிலைத்து நிற்க வேண்டும்.
இரண்டு பேரையும் அனுசரித்து பேசி எந்த பக்கம் முடிவு எடுப்பது என தெரியாமல் “மதில் மேல் பூனை போல்” தவித்துக் கொண்டிருக்கிறார் போல சூர்யா. ஆளுங்கட்சியாக அதிமுக இருந்த போது சில பிரச்சனைகளை எதிர்த்து பேசிய சூர்யா, சிறிது காலம் சூர்யா அவர்கள் எந்த சமுதாய பிரச்சனையுமே பேசாமல் மௌனம் காத்ததற்கு என்ன காரணம். அப்போ தனது ஜூனியருக்கு சப்போர்ட்டாக இருந்து வருகிறாரா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.
எது என்னவோ ஆனால் இருப்பது என்பது ஒருவருக்கு ஒரு ஓட்டு மட்டுமே, அந்த ஒரு ஓட்டை யாருக்கு போடுவது என்பதிலேயே சூர்யா அவர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. ஒருவேளை 2026 தேர்தல் நெருங்கும் நிலையில் கருத்துக்கணிப்பை பார்த்துவிட்டு சூழ்நிலைக்கு தகுந்தவாறு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என பொறுமை காக்கிறார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்களாம்.