Vijay : நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை ஆரம்பித்து தற்போது தீவிரமான அரசியல் களத்தில் செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து கட்சியாளர்களும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர்.
புதிதாக ஆரம்பித்த கட்சி என்பதால் சிறு சிறு தவறுகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்னதான் மூத்த கட்சி ஆக இருந்தாலும் கூட சில கட்சிகளும் அந்த தவறை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது வளர்ந்து வரும் கட்சி என்பதால் தவறுகள் கண்டிப்பாக நடைபெறும் அதையெல்லாம் கூட அவ்வப்போது சரி செய்து கொண்டு தனது வேலையை பார்த்து வருகிறார் விஜய்.
இவ்வாறு கட்சியின் வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் கட்சியை பிளவுபடுத்துவதற்காக, கட்சியின் பலத்தை உடைப்பதற்காக சில வேலைப்பாடுகளை பார்த்து வருகிறார்கள் “தமிழக வெற்றி கழகத்தின்” எதிர்ப்பாளர்கள்.
முதலமைச்சார் ஆகும் கனவில் இருக்கிறார் புஸ்ஸி..
அந்த வகையில் தற்போது சவுக்கு சங்கர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் புஸ்ஸி ஆனந்த் முதலமைச்சர் கனவில் விஜயுடன் சுற்றுகிறார் என்று கூறியுள்ளார். முதலமைச்சர் ஆகும் எண்ணத்தில்தான் விஜய் கட்சி ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார் பிறகு எப்படி புஸ்ஸி ஆனந்த் முதலமைச்சராகும் கனவில் இருக்கிறார் என்ற கேள்வியை முன்வைக்க அதற்கும் சவுக்கு சங்கர் பதிலளித்துள்ளார்.
அதாவது நான் கூறியது தமிழ்நாட்டின் முதலமைச்சர் அல்ல பாண்டிச்சேரியின் முதலமைச்சராக வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார். “புஸ்ஸி ஆனந்த்” பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர், அதனால் பாண்டிச்சேரியின் முதலமைச்சராகலாம் என்ற கனவில் விஜய் அவர்களின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
எப்படியும் பாண்டிச்சேரியில் உள்ள கூட்டணி முடிவுக்கு வரப்போகிறது. தமிழ்நாட்டில் விஜய் வென்றுவிட்டால் அடுத்த வாய்ப்பு அங்குதான் உள்ளது என முன்கூட்டியே திட்டம் தீட்டுகிறார் புஸ்ஸி ஆனந்த் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
ஒரு பக்கம் தமிழ்நாட்டில் ஓட்டுரிமையை புஸ்ஸி ஆனந்த் பெற்று விட்டதாக தகவல்களும் வெளியாகி உள்ளன. சரியாக தெரியவில்லை ஆனால் புஸ்ஸி ஆனந்த் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை பெற்று ஐந்து வருடம் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
அதனால் கட்சியை உடைத்து விட்டால் வென்று விடுவது எளிது என்று இவ்வாறு பேசி வருகிறீர்களா? என சவுக்கு சங்கரை எதிர்த்து மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்களாம். உண்மையாகவே “புஸ்ஸி ஆனந்த்” விசுவாசத்தில் விஜய் கூட இருக்கிறாரா ?அல்லது வேறு ஏதாவது திட்டம் இருக்கிறதா என்பது 2026 தேர்தலை பொறுத்துதான் தெரியவரும்.