பிரம்மாண்டமாய் உலகமெங்கும் ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி படம் வெளியாகி ஒரு பெத்த கலெக்ஷனை பார்த்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் இதற்கு கிராண்ட் ஓப்பனிங் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நார்வே நாடுகளில் இதுவரை இல்லாத வசூலை கொடுத்து முதலிடத்தை பிடித்துள்ளது இந்த படம்.
அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் அங்கே இது முதல் நாள் வசூலில் இரண்டாம் இடத்தை தான் தக்க வைத்துள்ளது. அங்கே இன்று வரை முதல் இடத்தில் இருப்பது விஜய்யின் லியோ படம் தானாம். தமிழ்நாட்டில் லியோ படம் முதல் நாளில் 32 கோடிகள் வசூலித்துள்ளது
தமிழ்நாட்டில் மற்றும் முதல் நாளில் கூலி படம் 27 கோடிகள் வசூலித்துள்ளது. இதற்கு முன்னர் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் வேட்டையன், ஜெய் பீம் இயக்குனர் டி ஜே ஞானவேல் கூட்டணியில் ரஜினி நடித்தார். இந்த படம் முதல் நாளில் 20 கோடிகள் வசூலித்துள்ளது.
கூலி மற்றும் வேட்டையன் இந்த இரண்டு படங்களாலும், விஜய் நடித்த மூன்று படங்களின் முதல் நாள் வசூலை முறியடிக்க முடியவில்லை. பீஸ்ட் மற்றும் கோட் ஆகிய இரண்டு படங்கள் முதல் நாள் வசூலில் மிரட்டி உள்ளது. இதில் பீஸ்ட் படத்தின் சாதனை தான் முதலிடத்தில் இருக்கிறது .
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த கோட் படம் முதல் நாளில் 31 கோடிகள் வசூலித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் படம் 36 கோடிகள் வசூலித்துள்ளது. இதற்குக் காரணம் அப்போதெல்லாம் 7:00 மணி காட்சிகள் மற்றும் ஸ்பெஷல் ஷோ காட்சிகள் இருந்தது. இப்படி லியோ, கோட், பீஸ்ட் என மூன்று படங்களும் முதல் நாளில் 30 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது.