Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மூடி வைத்திருந்த ரகசியத்தை போட்டு உடைக்கும் விதமாக ராஜி, கதிருடன் நடந்த கல்யாணத்தை பற்றி சொல்லிவிடுகிறார். ஆனாலும் இதைக் கேட்ட பாண்டியனுக்கு பெருசாக சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. இரண்டு பேரும் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று அமைதியாகிவிட்டார்.
ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முத்துவேல் மகள் மீது பாசத்தை காட்டி விடுவாரோ என்ற பயம் சக்திவேலுக்கு வர ஆரம்பித்து விட்டது. அதனால் அவ்வப்போது வாய்க்கு வந்தபடி ஓடிப்போனவள் என்று ராஜ்யை மட்டம் தட்டி பேசி முத்துவேலுவிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார்.
இதனை அடுத்து கதிர் ராஜி போய்க் கொண்டிருக்கும் பொழுது முத்துவேல் வருவதை பார்த்து ராஜி பாசத்தைக் காட்டும் விதமாக நான் சொன்னது அத்தனையும் உண்மைதான். அத்தை குடும்பம் உங்களுக்கு எப்பொழுதும் துரோகம் நினைத்ததே இல்லை, நீங்களும் அண்ணனும் பழி வாங்குவதை விட்டு நிம்மதியாக இருக்க வேண்டும்.
அண்ணனும் நிச்சயம் வெளியே வந்து விடுவார் என்று அப்பாவிடம் சென்டிமெண்டாக பேசி பாசத்தை காட்டுகிறார். இதை தவறாக புரிந்து கொண்ட சக்திவேல் வீட்டிற்கு வந்து, முத்துவேலுவிடம் என்ன மகள் பாசம் உங்களை இழுக்குதோ. இன்னும் கொஞ்சம் விட்டா மகளையும் மருமகனையும் நடு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சொந்தம் கொண்டாடுவார்.
நீ வழக்கம் போல் எல்லாத்துக்கும் சமைத்து போடு என் பையன் ஜெயிலுக்குள் கலி திங்கட்டும் என்று கோபத்துடன் பேசுகிறார். இதைக் கேட்டு வடிவும் அமைதியாக இருந்த நிலையில் சக்திவேல் சொல்வதைக் கேட்டு மகன் மீது இருக்கும் பாசத்தால் மற்றவர்களிடம் சண்டை போடுவதற்கு தயாராகிட்டார். இதோடு முடிவதில்லாமல் இனி அண்ணன் தம்பிக்குள் பிரிவு ஏற்படும் வகையில் இரண்டு பேரும் பிரிய போகிறார்கள்.
ஏனென்றால் சக்திவேலுக்கு பாசத்தை விட சொத்து மீது தான் அதிக ஈர்ப்பு. அதனால் எங்கே ராஜி இந்த வீட்டிற்குள் ஒட்டிக்கொண்டால் சொத்து பாதியாக பிரிந்து விடுமோ என்ற பயத்தில் தேவையில்லாத சண்டைகளை போட்டு வருகிறார். அந்த வகையில் முத்துவேலுவும் சக்திவேலுவுக்கும் பிரிவு வரப்போகிறது. அதன் பின் பாண்டியன் தான் சம்மந்திக்கு அடைக்கலம் கொடுக்கும் விதமாக முத்துவேலுக்கு உதவி பண்ணுவார்.